கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து நாட்டின் உள்ள சவுத்தாம்ப்டன் நகரின் ஏஜிஎஸ் பவுல் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் இந்த இறுதி போட்டியில் மோதி விளையாடவுள்ளன. இந்தப் போட்டியில் வானிலையும் தன் பங்கிற்கு ஆட்டம் ஆடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படியேதேனும் நந்ததால் அது எந்த அணிக்கு சாதகமாக அமையும் என்பதை அலசுவோம். 

இங்கிலாந்தின் வானிலை நிலவரம்: இங்கிலாந்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் கோடை காலம் என சொல்லப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அங்கு குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நாட்களில் மழைப் பொழிவு இருப்பின் அது 41 மில்லிமீட்டர் முதல் 48 மில்லிமீட்டர் வரை இருக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. 

சவுத்தாம்ப்டனில் நிலவரம் எப்படி? – ஜூன் முதல் வரையிலான வரையிலான நாட்களில் சராசரியாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் இந்தப் பகுதியில் பதிவாகும் என வானிலை நிலவரங்கள் சொல்கின்றன. ஜூலை மாத்தில் வெயில் அதிகம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. 

image

ஆனால், கடந்த 11 ஜூன் முதலான வானிலை நிலவரத்தை பொறுத்தவரை சவுத்தாம்ப்டனில் ‘பாசிங் கிளவுட்ஸ்’ அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மழைப் பொழிவு இருக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

கடந்த ஒரு வார காலத்தில் அங்கு 21 டிகிரி செல்சியஸ் வெப்பம் சராசரியாக பதிவாகி உள்ளது. காலை 6 முதல் பகல் 12 மணி வரை வெயில் பிரகசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சில நாட்களில் லேசான தூறல் மழை தூவுகிறதாம். அதனால், போட்டி நடைபெறவுள்ள 18 ஆம் தேதி முதல் 22 வரையிலான நாட்களில் மழைப் பொழிவு இருக்கலாம் என தெரிகிறது.

உத்தேசமாக நாள் ஒன்றுக்கு 90 ஓவர் வீசுவது இந்த வானிலைக்கு எதிரே சவாலான காரியமாக இருக்கலாம். அப்படி மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் ‘ரிசர்வ் டே’ என சொல்லப்படும் 23 ஆம் தேதி அன்று போட்டி நடைபெறலாம். அதிலும் முடிவு எட்டப்படவில்லை எனில் போட்டி  சமனானதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளும் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொள்ளும். 

image

இந்த வானிலை மாற்றம் இந்தியாயவுக்கு சாதாகமா, பாதாகமா? – மழைப் பொழிவு போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாகவே தொடங்கினால் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் உருவாகும். அதேபோல இரு அணியின் கேப்டன்களும் எதிரணிக்கு எதிரான வியூகங்களை அமைப்பதில் மாற்றம் இருக்கலாம். குறிப்பாக, இந்தியா இரண்டு ஸ்பின்னர்கள் உடன் விளையாடுவது மழைப் பொழிவு இருந்தால் பின்னடைவை கொடுக்கலாம். அதனால் வியூகங்களை மாற்றி உலகத்தரம் வாய்ந்த இரண்டு ஸ்பின்னர்களில் யாரேனும் ஒருவரைதான் கோலி அணிக்குள் பிக் செய்ய முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வறண்ட வானிலை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம். 

“டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியை பொறுத்தவரை களத்தில் நிலவும் வானிலை சூழல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்திய அணியின் வலுவான பவுலிங் கூட்டணியை கொண்டுள்ளது. இறுதிப் போட்டி நடைபெறும் நாட்களில் வெயில் இருந்தால் இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்புகள் உள்ளது. அதுவே, வானிலை கொஞ்சம் மந்தமாக இருந்தால் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்தியா விளையாடும் என கருதுகிறேன். 

என்னைக் கேட்டால் அஷ்வின்தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஸ்பின்னராக இந்த இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும். அவர் பேட்டிங்கிலும் கைகொடுப்பார். போட்டி நடைபெறும் நாட்களில் வறண்ட வானிலை நிலவினால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங்.

“என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டி சிறந்த போட்டியாக இருக்கும் என கருதுகிறேன். செய்திகளைப் பார்க்கும்போது இங்கிலாந்தில் மழைப் பொழிவு இருக்கலாம் என தெரிகிறது. அதனால்  வானிலை சூழலை வைத்து பார்க்கும்போது அது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும் இதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் போட்டியை வெளியிலிருந்து பார்க்க உள்ளேன்” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். 

image

“சூழ்நிலை எதிரணிக்கு சாதகம் என நாங்கள் எண்ணினால் இங்கிலாந்துக்கு பிளைட் பிடிக்க வேண்டிய தேவையில்லை. ஆஸ்திரேலிய அணியை அவர்களது சூழலில் நாங்கள் வீழ்த்தி உள்ளோம் என்ற நம்பிக்கை உடன் இந்த போட்டியை எதிர்கொள்ள உள்ளோம். நாங்கள் எள்ளளவும் சளைத்தவர்கள் அல்ல” என இந்திய கேப்டன் கோலி இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்னர் சொல்லியிருந்தார். 

இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வது சிறப்பானதாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

இயற்கையின் மழைப் பார்வை, போட்டி நடைபெறும் நாட்களில் படாமல் இருந்தால் நல்லதொரு கிரிக்கெட் போட்டியை காணலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணி வருகின்றனர். 

– எல்லுச்சாமி கார்த்திக் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.