மனித வாழ்க்கை  எப்போதுமே தேடல் நிறைந்தது. அது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். குழந்தைகளுக்கு அறிவு தேடலில் தொடங்கி வறியவர்களுக்கு பசிப்பிணி போக்க உணவு கூட ஒரு தேடலாகதான் இருக்கிறது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்க நாட்டின் குவாசுலு-நடால் மாகாணத்தில் அமைந்துள்ள குவாஹ்லதி கிராமத்தில் ஆயிர கணக்கான மக்கள் ஒன்று கூடி வைர கற்களை தேடியதாக தகவல் வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த மக்களுக்கு அவர்கள் சேகரிப்பது வைரம் தானா? என்பது கூட உறுதிபட தெரியவில்லை. 

“சமவெளியில் பள்ளம் எடுத்த போது அந்த பள்ளத்தில் பார்ப்பதற்கு பளபளவென வெள்ளை நிறத்தில் பூமிக்குள் கற்கள் கிடைப்பதை பார்த்தேன். அதை சேகரித்தேன். அது கிரிஸ்டல் கற்களை போல இருந்தது. அந்த செய்தி செவி வழியாக பரவ எல்லோரும் நான் பள்ளம் எடுத்த நிலப்பகுதிக்கு பொடி நடையாக படையெடுத்த வண்ணம் உள்ளனர்” என்கிறார் இந்த கற்களை முதன்முதலில் தங்கள் கிராமத்தில் அடையாளம் கண்டவர். 

image

இது எங்கள் வாழ்க்கையில் கிடந்துள்ள தடை கற்களை மாற்ற வந்த படிக் கற்கள். இது வைரம் என நம்புகிறோம். நம்பிக்கை தானே எல்லாம் என உள்ளூர் மீடியாக்களுக்கு முத்தாய்ப்பாக பேட்டிக் கொடுத்துள்ளனர் இந்த பகுதியில் இருக்கும் கற்களை சேகரிக்க வந்துள்ள மக்கள். 

“நிலையான வேலை கிடைக்காததால் நான் கிடைக்கின்ற வேலையை செய்பவன். எங்கள் ஊரில் என்னை போலவே பல இளைஞர்கள் உள்ளனர். நிகச்சயம் இந்த கற்கள் உடன் நான் வீடு திரும்பினால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுவார்கள்” என சொல்கிறார் வைரத்தை சேகரிக்க வந்த 27 வயது இளைஞர் மெண்டோ சபெலோ. 

அந்த பகுதியில் கற்களை சேகரிக்க குவிந்த மக்களில் சிலர் முதல்முறையக வைரத்தை தொட்டு பார்ப்பததற்காக வந்திருந்ததாகவும் உள்ளூர் பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த அந்த நாட்டின் அரசு நிகழ்விடத்திற்கு கனிமவள வல்லுனர்கள் குழுவை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாம். அவர்கள் ஆய்வு முடிவை பொறுத்தே அது வைரமா என்பது தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் அந்த இடத்திற்கு செல்ல பலரும் முயற்சி செய்து வருவதால் எந்நேரமும் சிறுவர்கள், பெரியவர்கள், மூத்த குடிமக்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் கற்களை எடுக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனராம். அந்த நாடு பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளதும் ஒரே நேரத்தில் மக்கள் திரளாக அங்கு குவிய காரணம் என சொல்லப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தால் தென் ஆப்பிரிக்கா திண்டாடி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அந்த நிலையில் மேலும் மோசமாக்கி உள்ளது. 

image

image

மக்கள் பெருமளவில் அங்கு திரள்வது கொரோனா பரவலுக்கு வழிவகை சேர்க்கலாம் என அரசு எச்சரித்து வருகிறது. மக்கள் தாங்கள் சேகரித்த வைரத்தை 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனையும் செய்ய தொடங்கி உள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.