இன்னும் எட்டு மாதங்களில் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

நாட்டிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாகவே சூடுபிடிக்க தொடங்கியிருந்த அம்மாநில அரசியல் களம் தற்போது அதிரடி மாற்றங்களால் தகிக்க தொடங்கியிருக்கிறது.

image

உத்தரப் பிரதேச தேர்தலுக்காக தேர்தல் பணிகளை முடித்துள்ள பாஜகவின் தேசியத் தலைமை சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் ஆகியோரது கடந்த கால செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்து. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்பாடுகளும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதில் சில அமைச்சர்களுடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், அதனால் அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர படலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் யூகங்களை என முதல்வர் யோசித்தனர் முற்றிலுமாக மறுத்துவிட்ட நிலையில், இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார் யோகி ஆதித்தனார்.

நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சரவை சுமார் ஒன்றரை மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்த இருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

image

முழுக்க முழுக்க அரசியல் ரீதியிலான இந்த சந்திப்பில், உத்தரப் பிரதேச மாநில தேர்தல் காலம் குறித்தும் கட்சியின் நிலைமை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

குறிப்பாக கொரோனா சமயத்தில அரசு எடுத்த நடவடிக்கைகள் பொது மக்களின் மனநிலை, பிற கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வரிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். அமைச்சரவை சகாக்களின் செயல்பாடுகள் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள முக்கிய நபர்கள் ஆகியோர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்துக் கொண்டிருக்கக் கூடிய மூத்த தலைவர் ஜித்தின் பிரசாதாவிற்கு முக்கியத்துவம் வழங்குவது உள்ளிட்ட விஷயங்களும், இனி அடுத்தடுத்து பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வரும் நிலையில், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம் குறித்து ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த நெருக்கடியான சூழலிலும் நிறைய நேரத்தை தனக்கு ஒதுக்கியதற்கு தனது மேலான ஆலோசனைகளை வழங்கி எதற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

image

பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசிய யோகி ஆதித்யநாத், அரசியல் ரீதியிலான முக்கியமான விஷயங்களையும் தேர்தலுக்குப் பாஜக தேசிய தலைமையிடம் இருந்து கிடைக்கப் பெறவேண்டிய முக்கியமான ஆலோசனைகள் நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் விரிவாக பேசியுள்ளார்.

தேர்தல் வியூகங்கள், பிரசார யுக்திகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் நிறைய முக்கியமான விஷயங்களை ஆலோசனையாக பாஜக தேசியத் தலைவரிடம் முன் வைத்திருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வு, கொரோனா மரணங்கள் ஆளும் அரசுக்கு எதிராக இயல்பாகவே உள்ள மனநிலை மத்தியில், பாஜக அரசுக்கு எதிரான மனநிலை உள்ளிட்டவை பாதகங்கள் பார்க்கப்படும் நிலையில், அதனை சரி செய்வதற்காக விரிவான திட்டங்கள் பாஜகவிற்கு தேவைப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை மெகா கூட்டணி அமைக்கும்பட்சத்தில் அதனை முறியடிப்பதற்கான புதிய உத்திகளும் கட்சிக்கு தேவைப்படுகிறது.

ஏனெனில் பீகார் சட்டமன்ற தேர்தலில் கூட பாஜக கிடைத்த வெற்றி சுலபமானதாக இல்லை. மேலும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பெரிய முன்னெடுப்புகளை எடுத்தும் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. எனவே மிக கவனமாக காய்நகர்த்தல்களை மேற்கொள்ள உள்ள பாஜக இனி அடுத்தடுத்த விரிவான ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எப்பொழுது வேண்டுமானாலும் அதிர்ச்சி தரத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழலாம்; அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

– நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.