கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 23).. தச்சுப் பணி செய்துவரும், சரவணக்குமார் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்துள்ளார். அதன் மூலம் தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம்

மோகனாம்பிக்கைக்கு ஏற்கெனவே திருமணமாகி, குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். சரவணக்குமார், மோகனாம்பிகை நட்பு தீவிரமாக, கடைசியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையாக வெடித்துள்ளது.

சரவணக்குமாரிடம், மோகனாம்பிகை சில மாதங்களுக்கு முன்பு ரூ 1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி தருவதாக சொல்லிய அவர், அதன் மூலம் தனது கணவருக்கு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் சொன்னபடி பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், இருவருக்குமிடையே அவ்வபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சரவணக்குமார்

ஒருகட்டத்தில், சரவணக்குமார் தர்மபுரிக்கு சென்று மோகனாம்பிகை வீட்டில் வைத்தே பணத்தை கேட்டுள்ளார். அப்போதும் மோகனாம்பிகை பணம் தரமறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சரவணக்குமார், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மோகனாம்பிகையின் 7 வயது மகனை கடத்தி கோவை வந்துள்ளார். இது ஆரம்பத்தில் மோகனாம்பிகை வீட்டுக்கு தெரியிவல்லை. நீண்ட நேரமாகியும் மகனை காணவில்லை என்பதால் தர்மபுரி போலீஸில் புகாரளித்துள்ளனர்.

கைது

இதையடுத்து கோவை வந்த தர்மபுரி போலீஸார், வடவள்ளி போலீஸ் உதவியுடன் சிறுவனை மீட்டனர். மேலும், சரவணக்குமாரை கைது செய்து விசாரணைக்காக அவரை தர்மபுரி அழைத்து சென்றனர். சிறுவனை கடத்திய காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.