தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இளம் ஓவியர் இளையராஜாவின் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், சீமான், கி.வீரமணி, வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஓவியர் இளையராஜாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்” என தெரிவித்திருக்கிறார்

தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்! pic.twitter.com/1ssRWmzDjS
— M.K.Stalin (@mkstalin) June 7, 2021

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில், “இயல்பான நிகழ்வுகளை மண்ணுக்கேற்ற வாழ்வியல் விழுமியங்களோடு சிந்தித்து, துல்லியத்தன்மையோடு ஓவியங்களாகத் தீட்டி, அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட ஓவியர் அன்புத்தம்பி இளையராஜா கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.  புகைப்படமா அல்லது ஓவியமா என வேறுபாடு காண இயலாத அளவிற்கு நுட்பமான படைப்புகளைத்தந்த தம்பி இளையராஜா அவர்கள் தனது ஓவியங்களின் வழியே காலங்கள் கடந்தும் வாழ்வார்! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடக உலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

இயல்பான நிகழ்வுகளை மண்ணுக்கேற்ற வாழ்வியல் விழுமியங்களோடு சிந்தித்து, துல்லியத்தன்மையோடு ஓவியங்களாகத் தீட்டி, அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட ஓவியர் அன்புத்தம்பி இளையராஜா கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். pic.twitter.com/MXUSQjPygV
— சீமான் (@SeemanOfficial) June 7, 2021

image

ஓவியர் இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில், “ஓவியர் இளையராஜாவின் மறைவால் வானவில் ஒரு வண்ணத்தை இழந்துவிட்டது. இது ஒரு சித்திரச்சாவு. திராவிடக் கோடுகள் வழியே பயணப்பட்ட தமிழோவியன் இளையராஜா. வருந்துகிறேன்; இரங்குகிறேன். வண்ணக் கிண்ணம் இழந்த தூரிகைக்கு யார் ஆறுதல் சொல்வது?” என தெரிவித்திருக்கிறார்

ஓவியர்
இளையராஜாவின் மறைவால்
வானவில் ஒரு வண்ணத்தை
இழந்துவிட்டது.

இது ஒரு சித்திரச்சாவு.

திராவிடக் கோடுகள் வழியே
பயணப்பட்ட தமிழோவியன்
இளையராஜா.

வருந்துகிறேன்;
இரங்குகிறேன்.

வண்ணக் கிண்ணம் இழந்த
தூரிகைக்கு
யார் ஆறுதல் சொல்வது? pic.twitter.com/C0y7VnZvAe
— வைரமுத்து (@Vairamuthu) June 7, 2021

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், ” மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளை தன் ஓவியங்களில் தத்ரூபமாக வெளிப்படுத்திய ஓவியக்கலைஞர் இளையராஜா அவர்கள் மறைந்தது அறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஓவியக்கலைஞர்களுக்கு என் ஆறுதல்.ஆழ்ந்த இரங்கல்.சகோதரர் இளையராஜா தன் கலையின் மூலம் என்றென்றும் நம்மிடம் வாழ்வார்” என தெரிவித்திருக்கிறார்.

மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளை தன் ஓவியங்களில் தத்ரூபமாக வெளிப்படுத்திய ஓவியக்கலைஞர் இளையராஜா அவர்கள் மறைந்தது அறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஓவியக்கலைஞர்களுக்கு என் ஆறுதல்.ஆழ்ந்த இரங்கல்.சகோதரர் இளையராஜா தன் கலையின் மூலம் என்றென்றும் நம்மிடம் வாழ்வார். pic.twitter.com/6Qess69FLP
— Udhay (@Udhaystalin) June 7, 2021

ஓவியர் இளையராஜாவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “போற்றத்தகுந்த திறமையாளர், 42 வயதே ஆன இளைஞர், ஓவியர் எஸ்.இளையராஜா அவர்களின் மறைவு (நேற்றிரவு 12 மணியளவில் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில்) தமிழர் தம் கலைத் துறையில் பெரும் இழப்பாகும். உயிரோவியப் பாணி ஓவியங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்புகழ் எழுதிய கடும் உழைப்பாளி. கும்பகோணம் அருகில் செம்பியவரம்பல் என்ற கிராமத்தில் பிறந்து, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா வரையில் சென்று தன் ஓவியத் திறமையால் சிறந்து விளங்கியவர். திராவிட முகங்களைத் தன் தூரிகையால் ஒளிரவைத்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ஓவியர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலும் இரங்கலும்!” என தெரிவித்திருக்கிறார்

போற்றத்தகுந்த திறமையாளர், 42 வயதே ஆன இளைஞர், ஓவியர் எஸ்.இளையராஜா அவர்களின் மறைவு (நேற்றிரவு 12 மணியளவில் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில்) தமிழர் தம் கலைத் துறையில் பெரும் இழப்பாகும். pic.twitter.com/XLuDPOudaE
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) June 7, 2021

இவருக்கு இரங்கல் தெரிவித்த இயக்குநர் பார்த்திபன், “ஒரு நிகழ்வில் என்னைச் சந்திக்க ஓவியர் இளையராஜா 10 நிமிடங்களில் Portrait வரைந்து கொடுத்தார்.’இவன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததோடு, ‘நாளைய இயக்குநர்கள்’என்று பெயர் போட்டு இளையராஜாவை உற்சாகப்படுத்த,பின் உலக புகழ் பெற்று இன்று இவ்வுலகைப் பிரிந்து/வருத்தம்” என தெரிவித்திருக்கிறார்

ஒரு நிகழ்வில் என்னைச் சந்திக்க ஓவியர் இளையராஜா 10 நிமிடங்களில் Portrait வரைந்து கொடுத்தார்.’இவன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததோடு, ‘நாளைய இயக்குநர்கள்’என்று பெயர் போட்டு இளையராஜாவை உற்சாகப்படுத்த,பின் உலக புகழ் பெற்று இன்று இவ்வுலகைப் பிரிந்து/வருத்தம் pic.twitter.com/uULeedYGC1
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 7, 2021

இளையராஜாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித், “பேரன்பு மிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா அவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்!” என தெரிவித்திருக்கிறார்

பேரன்பு மிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா அவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்! pic.twitter.com/8zj8MeT4Ie
— pa.ranjith (@beemji) June 7, 2021

தத்ரூப ஓவியங்களால் பிரசித்தி பெற்றவரான ஓவியர் இளையராஜா, கொரோனா தொற்றால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 43. கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவரான ஓவியர் இளையராஜா பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றவர். 2010 ஆம் ஆண்டு முதல் பத்திரிகை ஒன்றில் இவரின் ஓவியங்கள் வெளிவரத்தொடங்கின. திராவிடப்பெண்கள் என்ற தலைப்பிலான இளையராஜாவின் ஓவியங்கள், தூரிகை கொண்டு வரையப்பட்ட சித்திரங்களா அல்லது புகைப்படங்களா என்று கேட்கும் அளவுக்கு தத்ரூபமானவை. தனது சகோதரி மகள் திருமணத்திற்காக கும்பகோணம் சென்றவர் கடந்த வாரம் சென்னை திரும்பினார். பின்னர் கொரோனா அறிகுறிகள் தென்பட்டநிலையில், குளத்தில் குளித்ததால் சளி பிடித்ததாக கூறியிருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கும் அறிகுறிகள் ஏற்பட்டநிலையில், சில நாட்களுக்கு முன் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொற்று நுரையீரல் முழுவதும் பரவியநிலையில், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு ஓவியர் இளையராஜா காலமானார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.