தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துடன் ஸ்டாலின்   அலோசனை

கோவேக்ஸின் தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக தமிழ்நாடு அரசு நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், முதல்வரின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மகாராஷ்டிரா: 12- வது வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. கல்லூரியில் சேர பொது நுழைவுத்தேர்வு?

மத்திய அரசு கொரோனாவை காரணம் காட்டி சி.பி.எஸ்.சி.போர்டு 12வது பொதுத்தேர்வை ரத்து செய்து சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் 12வது பொதுத்தேர்வை ரத்து செய்வதா அல்லது நடத்துவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. பெரும்பாலான மாநிலங்கள் தேர்வை ரத்து செய்யும் மனநிலையில் தான் இருக்கிறது. இதில் சில மாநிலங்கள் 12வது வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன. அவற்றை பின்பற்றி மகாராஷ்டிரா அரசும் 12வது வகுப்பு அரசு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மாநில அமைச்சரவை கூடி இதற்கான முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அளித்த பேட்டியில், “கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12வது வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு

மும்பை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. 10வது பொதுத்தேர்வை ரத்து செய்யவே உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மகாராஷ்டிராவில் பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் 12வது வகுப்பு தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். 10வது வகுப்பு மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறதோ அதே முறையை பின்பற்றி 12வது வகுப்பு மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

10-வது வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு 11வது வகுப்பு அட்மிஷனுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இப்போது 12வது வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் கல்லூரியில் சேரவும் மாநில அரசு பொது நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் படி கல்லூரியில் சேர பொது நுழைவுத்தேர்வு அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவா, மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உட்பட சில மாநிலங்கள் ஏற்கனவே 12வது வகுப்பு தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளன

செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி?!

செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி உற்பத்திக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதனார். இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிமன்றம், `செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க உத்தரவிட முடியாது. மத்திய மாநில அரசுகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குத்தகைக்கு மாநில அரசு கேட்டிருந்தாலும், அதனை முடிவெடுக்க அவகாசம் மத்திய அரசுக்கு தேவைப்படும். மையத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ந்து, தடுப்பூசி உற்பதி தொடங்கும் என நம்புகிறோம்” என்றது.

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி?

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது பாதிப்புகள் பல மாநிலங்களில் குறைய ஆரம்பித்திருந்தாலும், முழுமையாக இன்னும் குறையவில்லை. இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.எஸ்.இ +2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. எனினும் மதிப்பெண் முறைகள் குறித்த ஆறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம், “கொரோனா காலகட்டத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி தான்… ஆனால் எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து 2 வாரத்தில் அறிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,34,154 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. நேற்று இந்த பாதிப்பு அளவானது 1,32,788 -ஆக இருந்தது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,84,41,986 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,887. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,37,989-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,63,90,584-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 17,13,413 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,11,499 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 22,10,43,693 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

கருணாநிதி பிறந்தநாள்: ஸ்டாலின் மரியாதை!

ஜூன் 3-ம் தேதியான இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு, பல்வேறு திட்டங்கள் தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக அவர் காலையில் சென்னை மெரினாவில் இருக்கும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். அவருடன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர் பாலு, அமைச்சர்கள் துரை முருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். அதனை தொடர்ந்து கருணாநிதியின் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியான ரூ.2,000 இரண்டாவது தவணை வழங்கலை தொடங்கி வைப்பது, மாவட்டத்துக்கு 1,000 மரக்கன்றுகள் என 38,000 மரங்கள் நடும் திட்டம், ரேஷன் கடைகளில் 14 மளிகை பொருள்கள் இலவசமாக வழங்கும் திட்டம், கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உள்ளிட்ட 18 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.