இந்தியாவில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து நிலவுவதாக சமூக வலைத்தள ஊடகமான ட்விட்டர் நிறுவனம் பத்திரிகை அறிக்கை மூலமாக தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து பத்திரிகை அறிக்கை கொடுத்துள்ளது இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம். 

“இந்த அறிக்கையில் வாயிலாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு ஆணையிட முயல்கிறது ட்விட்டர். அதன் அண்மையை நடவடிக்கைகள் இந்தியாவின் சட்ட திட்டங்களை வேண்டுமெனவே தரம் தாழ்த்தும் நோக்கில் முயலுவதாக தெரிகிறது. அதோடு குற்றச்செயலை தடுக்கும் நோக்கில் இந்திய அரசின் புதிய நெறிமுறைகளுக்கு கட்டுப்படவும் மறுக்கிறது ட்விட்டர்” என இரண்டு பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம்.


காங்கிரஸ் டூல்கிட் தொடர்பாக ட்விட்டர் அலுவலத்திற்கு சென்று காவல்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கிய நிலையில், இந்தியாவில் உள்ள தங்களது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு இதனை சொல்லியுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.