43 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி முறையில் தொடங்கியது. அதில் கொரோனா சிகிச்சைப் பொருட்களுக்கு வரி குறைக்க மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பரவியது எப்படி? – ஆய்வுக்கு ஆதரவு: கொரோனா வைரஸ் முதன்முதலில் எப்படி பரவியது என ஆய்வு செய்ய வேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கைக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து கொரோனா அலை – ராகுல் எச்சரிக்கை: இந்தியாவில் தடுப்பூசி போடும் நடைமுறைகளை மாற்றியமைக்காவிட்டால் அடுத்தடுத்து பல கொரோனா அலைகள் தாக்கும் அபாயம் உள்ளது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பருக்குள் தடுப்பூசிப் பணி பூர்த்தியாகும்: வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் தடுப்பூசிப் பணிகள் நிறைவடையும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் பேச்சு மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்பும் வகையில் இருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

கோவையில் மீண்டும் ஆய்வு செய்கிறார் முதல்வர்: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆய்வுசெய்யவுள்ளார். தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிகிறார்.

தமிழகத்தில் 400 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என மருத்துவ வல்லுநர் குழு உறுதி அளித்துள்ளனர்.

மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது புகார்: சென்னை மகிரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து விசாரித்து வருவதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் புகார்: சென்னையில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

ராஜகோபாலனின் தவறுக்கு ஆதாரம் உள்ளது: பாலியல் புகாரில் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உறுதியளித்துள்ளார். மேலும், ஆசிரியர் ராஜகோபாலன் தவறு செய்ததற்கு ஆதாரம் உள்ளதாகவும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2டிஜி பவுடர் விலை ரூ.990: கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் 2 DG மருந்தின் விலை பாக்கெட்டுக்கு 990 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பயன்படுத்தப்பட்ட மாஸ்க், கையுறை மறுவிற்பனை: மத்திய பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்டு குப்பையில் வீசப்பட்ட கவச உடை, முகக்கவசங்களை கழுவி மறுவிற்பனை செய்யப்பட்டது அம்பலமானது.

தேங்கிய நீரை வெளியேற்றக் கோரிக்கை: மழை நின்றதால், கன்னியாகுமரியில் முக்கிய அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜூன் 30 வரை வெளிநாடுக்கு விமானம் பறக்காது: சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

13 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.