”கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்கவும், நோயின் தீவிரத்தன்மையை உடனடியாக கண்டறியவும், சி ரியாக்ட்டிவ் புரோட்டின் என்ற ரத்த பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இந்த பரிசோதனை எதற்காக, எவ்விதம் பலன் அளிக்கிறது என்று பார்க்கலாம்.

 தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வீட்டுத்தனிமையில் உள்ளனர். இவ்வாறு வீட்டுத்தனிமையில் இருக்கும் ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும்போது, படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தேவை என தவிக்கும்நிலை ஏற்படுகிறது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு சிடி ஸ்கேன் , Complete blood count உடனடியாக எடுக்கப்படுவது போல சி ரியாக்ட்டிவ் புரோட்டீன் (C Reactive Protein) என்ற ரத்தப்பரிசோதனையும் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

ஒரு நபருக்கு வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை ஆகியவற்றால் எந்த பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சிஆர்பி டெஸ்ட் எனப்படும் இந்த சோதனை மூலம் கண்டறியலாம். இதை Infalamation detection என்பர். இந்த சோதனையில் அளவீடு 5 அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர் நலமுடன் இருப்பதாக அறியலாம். 5 அல்லது அதற்கு கீழ் இருந்தால் அவர் வீட்டுத் தனிமையில் இருக்கலாம். அதற்கு மேல் அளவீடு இருந்தால், அவரை கொரோனா பராமரிப்பு மையத்திலோ, அல்லது தீவிர சிகிச்சை பிரிவிலோ முன்கூட்டியே அனுமதிக்கலாம்.

 

இது தவிர Serum Ferritin, LDH, D dimer ஆகிய ரத்தப்பரிசோதனையும் கொரோனா நோயாளிகள் அவ்வப்போது எடுத்துக் கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக வீட்டுத்தனிமையில் இருப்போர் திடீர் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள இவை கட்டாயம் உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.