நடப்பு நிதி ஆண்டில் முதல் சீரியஸ் தங்க கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது, மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கி இந்த கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. இந்தப் பத்திரங்களை வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள், தபால் நிலையங்களில் வாங்க முடியும். மே மாதம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்தப் பத்திரங்களுக்காக விண்ணப்பிக்க முடியும், முதலீடு செய்தவர்களுக்கு மே மாதம் 25-ம் தேதி கடன் பத்திரங்கள் ஒதுக்கப்படும்.

தங்கத்தை நாணயமாக, நகைகளாக வாங்குவதைவிட இதுபோல கடன் பத்திரங்கள் மூலமாக வாங்கும் பட்சத்தில், தங்கத்தில் முதலீடும் செய்ய முடியும். தங்கத்தின் பயனை அனுபவிக்கவும் முடியும். அதேபோல செய்கூலி சேதாரம் உள்ளிட்ட இழப்புகளையும் தவிர்க்க முடியும் என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் தங்கம் கடன் பத்திரம் திட்டங்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி வருகிறது.

image

விலை: குறைந்தபட்சம் ஒரு கிராம் முதலீடு செய்ய முடியும், ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 4000 கிராம் வரை ஒரு தனிநபர் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். ஒரு கிராம் விலையாக ரூ.4,777 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ரொக்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக முதலீடு செய்ய முடியும்.

டிஜிட்டல் மற்றும் ஆன்லைனில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு கிராம் ரூ.4,727 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

வருமானம்: இந்தப் பத்திரத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 2.5 சதவீத வட்டி வழங்கப்படும். அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி வழங்கப்படும். இந்த கடன் பத்திரத்தின் முதலீட்டு காலம் எட்டு ஆண்டுகள். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த முதலீட்டில் இருந்து வெளியேறலாம். அப்போது தங்கத்தின் விலைக்கு ஏற்ப முதலீடு திரும்ப வழங்கப்படும். இந்தப் பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் திருட்டு பயம் இல்லை. இதர செலவுகள் இல்லை. ரிசர்வ் வங்கியின் உத்தரவாதம் இருக்கிறது. முதலீட்டு வட்டி கிடைக்கிறது. கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு டிடீஎஸ் பிடித்தம் செய்யப்பட மாட்டாது, அதேபோல எட்டு ஆண்டுகள் முதலீட்டை தொடரும் பட்சத்தில் கிடைக்கும் தொகைக்கு மூலதன ஆதாய வரி ஏதும் விதிக்கப்பட மாட்டாது.

தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதைவிட இதுபோன்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பது மட்டுமல்லாமல் பல வகைகளில் லாபரகமானதும் கூட.

நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பர் வரை ஆறு சீரியஸ் தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

சீரியஸ் | விண்ணப்பிக்கும் காலம் | கிடைக்கும் தேதி

சீரியஸ் 1: மே 17 முதல் மே 21 வரை – மே 25

சீரியஸ் 2: மே 24 முதல் மே 28 வரை – ஜூன் 1

சீரியஸ் 3: மே 31 முதல் ஜூன் 4 வரை – ஜூன் 8

சீரியஸ் 4: ஜூலை 12 முதல் ஜூலை 16 வரை – ஜூலை 20

சீரியஸ் 5: ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 13 வரை – ஆகஸ்ட் 17

சீரியஸ் 6: ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை – செப்.7

ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் 5% முதல் 10% வரை தங்கம் இருக்கலாம் என பல நிதி ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.