மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அறிவிப்பு என்று கூறி, வாட்ஸ் அப்பில் அலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள், இணையதள முகவரி ஆகியவை பகிரப்பட்டு, மருத்துவமனைகள் தொடர்பான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வாட்ஸ் அப் செய்யுங்கள், உங்களுக்கு அழைப்பு வரும் என்ற தகவலோடு பகிரப்படுகிறது.

வாட்ஸ் அப் தகவல்

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு: Mr.Ma.Subramaniam MLA,

Minister for Health and Ex. Mayor for Chennai,

Mobile – 91***00000

Home – 04422500999

Mail.ID: ma.subramanian@yahoo.com

Address: 4/7 Labour Colony, Guindy,

Chennai 600032.

Any Hospital related issues pls what’s up…. dont call, u will get a call back.

இந்த வாட்ஸ் அப் தகவல் கிடைத்ததும், இது உண்மையா அல்லது வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட வதந்தியா என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள அதற்கு நேரடியாக மெசேஜ் அனுப்பிப் பார்த்தோம். நம்மிடம் இருந்த சந்தேகத்தைக் குறிப்பிட்டு உதவுமாறு கேட்டிருந்தோம்.

சமீபத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முயன்றபோது, ஆஸ்துமா பிரச்னை இருப்பதால் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த வேண்டாமென்று ஒருவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், அவருடைய நிலையைக் குறிப்பிட்டு தடுப்பூசி விஷயத்தில் உதவி தேவை என்று நாம் தெரியப்படுத்தினோம்.

இந்தக் கோரிக்கை, வாட்ஸ் அப் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை எவ்வித பதிலோ அழைப்போ வரவில்லை. அந்த அலைபேசி எண் மற்றும் மருத்துவம் தொடர்பான உதவிகளுக்காக குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பார்த்தோம். அதற்கும் தொடர்பு கிடைக்கவில்லை.

வாட்ஸ் அப்பில் உதவி கேட்டு அனுப்பப்பட்ட கோரிக்கை

எனவே, இந்த தகவலை உறுதிசெய்ய சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளரிடம் பேசினோம். “அமைச்சரின் எண் என பகிரப்படும் அந்த எண் உண்மைதான். ஆனால், அதற்கு தகவல் அனுப்பி நேரடியாக உதவி கேட்கலாம் என எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. அது தவறானது. அதற்கு நிறைய கோரிக்கைகள் வருகின்றன. அவற்றை ஒருங்கிணைப்பது என்பது சிரமமான காரியம். எனவே இதற்கு எந்தக் கோரிக்கையும் அனுப்பவேண்டாம். மக்களின் கோரிக்கைகளை நேரடியாகப் பெற்று நடவடிக்கை எடுக்க வேறு ஏதேனும் ஏற்பாடுகள் செய்வது குறித்து பரிசீலிக்கிறோம். அதுகுறித்து பின்னர் அறிவிக்கிறோம்” என்றார்.

ஆதலால் மக்கள் யாரும் மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு கோரிக்கைகளை அனுப்பிவைக்க வேண்டாம். மாறாக, அரசின் கொரோனா உதவி மைய எண்களான 044 – 29510400, 044 – 29510500, 044 – 24300300, 044 – 46274446, 9444340496, 8754448477 ஆகியவற்றை நாடலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.