ஐபிஎல் தொடரின் இரண்டு மிகப்பெரிய அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று இரவு டெல்லியில் நடக்கும் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன. 2020 சீசனில் வெளிப்படுத்தியதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இரு அணிகளும் பெர்ஃபார்ம் செய்துகொண்டிருக்கின்றன. அது மும்பை அணிக்கு சில சிக்கல்களை விளைவிக்கும். அவை இந்த வீடியோவில்…

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், தொடர்ந்து 5 போட்டிகளில் வென்றிருக்கிறது. ஒவ்வொரு வெற்றியுமே மிகப்பெரிய வெற்றிகள். அதனால், அட்டகாசமான ரன்ரேட்டும் வைத்திருக்கிறது. மும்பையோ 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என நான்காம் இடத்தில் இருக்கிறது. ஒருவேளை இன்று தோற்றுவிட்டால், அவர்களின் ரன்ரேட் அடிபடும். அடுத்த இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் இவர்களை முந்துவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்துவிடும். அதனால், இந்தப் போட்டி மும்பைக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

இந்த சீசனில் இரண்டு அணிகளின் செயல்பாடும் சொல்வது, பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் அணி, போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என்பதுதான். நம்பர்களை வைத்துப் பார்த்தால், இதில் சென்னை சூப்பர் கிங்ஸின் கை ஓங்குகிறது. அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் விஷயம் என்ன? மும்பை ஏன் அதில் பின்தங்குகிறது, இரண்டு அணிகளுக்கும் இன்று துருப்புச் சீட்டாக இருக்கப்போகும் வீரர்கள் யார்… முழுமையான அலசல் வீடியோவில்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.