தன் இருப்பை துடிப்பாக நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது இதயம். இதயத்துக்குச் செல்லும் 10 சதவிதம் ரத்தம் தடைபட்டால்கூட நெஞ்சு வலி ஏற்பட்டுவிடும். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றால் உயிரைக் காப்பாற்றிவிடலாம். ஆனால் மனித உடலில் சுமார் 500 வேலைகளை சத்தமின்றி செய்துகொண்டிருக்கும் கல்லீரல், தன் பாதிப்பை வெளிக்காட்டுவதிலும் அமைதியையே கடைப்பிடிக்கும்.

Liver

“கல்லீரலில் மிகுதியான பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். இந்தியாவில் 10 லட்சம் பேர் லிவர் சிரோசிஸ் என்ற கல்லீரல் பாதிப்புடன் உள்ளனர். இன்றைய தேதியில் கல்லீரல் சேதமடைந்து அதனை மாற்ற வேண்டிய கட்டத்திலிருப்பவர்கள் சராசரியாக 20,000 பேர்.

ஆனால் இந்தியாவில் மொத்தமாகவே ஓராண்டுக்கு 2,000 – 2,500 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்தான் நடைபெறுகின்றன” என்கிறார் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் கே. இளங்குமரன்.

கல்லீரல்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து `கல்லீரலை நேசிப்போம்’ என்ற ஆன்லைன் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 24-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் கே.இளங்குமரன், கல்லீரல் சிகிச்சை மருத்துவர் எஸ்.குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். கல்லீரல் பாதுகாப்பு பற்றிய ஆலோசனைகளை அளிப்பதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்கள்.

liver awareness event

இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். வெபினாரில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.