பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை தொடுகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை போன்ற புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் பாதிப்பு அதிக அள்வில் இருப்பதால், நிலவரம் மக்களை கவலைக் கொள்ள செய்திருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அவரச ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

மருத்துவமனையில் முதல்வர் அனுமதி:

எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இன்று அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. அதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததால் தற்போது அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே நாளில் 2,73,810 பேருக்கு தொற்று!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,50,61,919 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா சோதனை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,619. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,1,78,769-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 19,29,329 பேர் சிகிசையில் இருக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.