தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 4 நாட்களில் மட்டும் ரூ.2.78 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரைத் தவிர்த்து பிற இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் மட்டும் ரூ. 2,52,34,900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோர் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றாதோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. எனவே முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200 அபராதமும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதோர்மீது ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

image

இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னை நகரைத் தவிர்த்து பிற இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து மட்டும் ரூ. 2,52,34,900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தெற்கு காவல்துறை மண்டலத்தில் மட்டும் ரூ.85.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

<iframe width=”420″ height=”315″ src=”https://www.youtube.com/embed/SmFmPbPu4Ac” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

கடந்த 8ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதிவரை தமிழகம் முழுவதும் 1,30,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களின்மீது தமிழகம் முழுவதும் 6,465 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 25,90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.