தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினின் மகள் செந்தாமரை – சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

நீலாங்கரையில் உள்ள செந்தாமரையின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் திருவண்ணாமலையில் திமுகவின் முக்கிய பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. தேர்தல் பரப்புரைக்காக ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த எ.வ. வேலுவின் கல்லூரியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் ஸ்டாலினின் நிழலாக செயல்படுவதாக கருதப்படும் மருமகன் சபரீசன் வீட்டில் இன்று நடைபெறும் ஐடி ரெய்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த ரெய்டு என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.