பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடயே வெளியாகியிருக்கிறது ஒன்ப்ளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள். பட்ஜெட் செக்மென்ட்டில் கிங்காக இருந்த ஒன்ப்ளஸ் தங்கள் ‘ப்ரோ’ மொபைல்களை வெளியிட்டு ப்ரீமியம் செக்மன்ட்டிலும் இடம்பிடித்தது. இதன் மூலம் சாம்சங் மற்றும் ஆப்பிளுக்கு போட்டியாக வந்து நின்றது ஒன்ப்ளஸ். ஆப்பிள் மற்றும் சாம்சங் போலவே ப்ரீமியம் மொபைல்கள் ஆனால், அதனை விடக் கொஞ்சம் குறைவான விலை எனத் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது ஒன்ப்ளஸ். ஒன்ப்ளஸ்ஸின் முந்தைய மாடலான ஒன்ப்ளஸ் 8 ப்ரோ வெளியாகி ஓராண்டு கழித்து அதன் ப்ளாக்ஷிப் மாடலான ஒன்ப்ளஸ் 9 ப்ரோ வெளியாகியிருக்கிறது.

ஒன்ப்ளஸ் 9 சீரிஸ்

ஒன்ப்ளஸ் 8 ப்ரோவை விட 10,000 ரூபாய் விலை அதிகமாக வெளியாகியிருக்கிறது ஒன்ப்ளஸ் 9 ப்ரோ. ஆனால், அதற்கு நியாயம் சேர்க்கிறதா ஒன்ப்ளஸ் 9 ப்ரோ?

ஒன்ப்ளஸ் 9 சீரிஸில் முதன்மையாக அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியது அதன் கேமராக்கான பார்ட்னர்ஷிப்பைத் தான். ஒன்ப்ளஸ் 9 கேமாராக்களுக்காக ஸ்வீடனைச் சேர்ந்த ஹேஸல்பிளாட் நிறுவனத்துடன் கைகோர்த்திருப்பதாக இணையமெங்கும் விளம்பரப்படுத்தியது ஒன்ப்ளஸ். இதற்கான காரணம் என்னவென்றால், முதன்முதலில் நிலவில் மனிதன் கால்வைத்த நிகழ்வை படம்பிடித்தது ஹேசல்பிளாஃடின் கேமாரா தான். மிகவும் ப்ரீமியமான கேமராக்கள் அந்நிறுவனத்துடையது. ஆனால், ஒன்பிளஸின் அந்த கேமராக்கள் பயன்படுத்தப்படவில்லை, அந்நிறுவனத்தின் சென்சார்கள் கூட பயன்படுத்தப்படவில்லை. ஒன்ப்ளஸ் 9 சீரிஸின் கேமராக்களில் ஹேசல்பிளாட் ‘கலர் சயின்ஸ்’ மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்ப்ளஸ் 9 சீரிஸ் கேமராக்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இதற்கு முந்தைய வெர்ஷன்களை விட இன்னும் கொஞ்சம் இயற்கையானதாகத் தெரியும்.

ஒன்ப்ளஸின் 9 சீரிஸ் மாடல்கள் அனைத்தும் 8 GB/128 GB மற்றும் 12 GB/256 GB என்ற இரு வேரியன்ட்களில் வெளியாகியிருக்கின்றன. இதன் 9ஆர் மாடலின் 8 GB/128 GB வேரியன்ட் 39,999 ரூபாய்க்கும், ஹை-என்ட் மாடலான 9 ப்ரோ 12 GB/256 GB வேரியன்ட் 69,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. ப்ராசஸரைப் பொருத்தவரை, ஆண்ட்ராய்டில் தற்போது இருக்கும் ப்ளாக்ஷிப் ப்ராசஸரான Snapdragon 888 தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது ஆண்ட்ராய்டு மார்கெட்டில் வெளியாகியிருக்கும் ஹை-என்ட் மொபைல்களில் எல்லாம் இந்த ப்ராசஸர்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அசூஸ் போன் 5 (Asus Phone 5) மற்றும் சாம்சங் எஸ்21 சீரிஸ் (Samsung S21 Series) என அனைத்து ஃப்ளாக்ஷிப் மொபைல்களிலும் Snapdragon 888 சிப்செட்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தும் ஒன்பிளஸை விட விலை அதிகம்.

OnePlus 9 Series

கேமரா குவாலிட்டி இதற்கு முந்தைய ஒன்ப்ளஸ் மொபைல்களை விட சிறப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். கேமராவைத் தாண்டி இந்த 9 சீரிஸ் மொபைல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை அறிமுகப்படுத்துகிறது ஒன்ப்ளஸ். 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வெளியாகியிருக்கின்றன 9 ப்ரோ மாடல். ஆனால், ஒன்ப்ளஸ் 9 மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இந்திய வெர்ஷனில் மட்டும் கொடுக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வெளியாகியிருக்கும் ஒன்ப்ளஸ் 9 மாடல்களில் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அதனை ஈடுசெய்யும் விதமாக இந்திய வெர்ஷனில் 65W சார்ஜிங் சப்போர்ட் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ். இதனால் 30 நிமிடத்திலேயே மொபைல் 100 சதவிகிதம் சார்ஜ் ஆகிவிடும் என்றும் தெரிவித்திருக்கிறது நிறுவனம்.

Also Read: வெளியானது ஒன்ப்ளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்… விலை மற்றும் சிறப்புகள் என்னென்ன?

OnePlus 9 Series

9 ப்ரோவில் செல்பி கேமராவில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால் ரியர் கேமாரவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 8 ப்ரோவில் 48 MP + 48 MP + 8 MP+ 5 MP ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருந்தது. 9 ப்ரோவில் 48 MP + 8 MP + 50 MP + 2 MP ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. செல்பி கேமரா அதே 16 MP தான்.

9 சீரிஸ் மொபைல்கள் அனைத்துமே 5G சப்போர்டுடன் வெளியாகியிருக்கின்றன. 8 ப்ரோவுடன் ஒப்பிடும்போது பலவற்றில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ப்ரீமியம் செக்மண்ட்டில் இருக்கும் மற்ற மொபைல்களுடன் ஒப்பிடும் போது குறைவான விலையிலேயே ஒன்ப்ளஸ் 9 சீரிஸ் மொபைல்கள் இருக்கின்றன. இதன் பெர்பார்மன்ஸ் எப்படி இருக்கிறது, வாடிக்கையாளர்களை இந்தப் புதிய ஒன்ப்ளஸ் திருப்திப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.