இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்கள் புகார்களுக்கு விரைவில் தீர்வு காண, இனி புகார்களை ஆன்லைன் மூலம் தெரிவிக்கும் வசதியை ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிமுகம் செய்துள்ளது.

காப்பீட்டு சேவை குறைபாடு தொடர்பான புகார்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு வசதியாக காப்பீட்டு தீர்ப்பாயம் விதிமுறைகளில் 2017 (Ombudsman Rules 2017) மத்திய அரசாங்கம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள், பாலிசிதாரரின் புகாருக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்க்காவிட்டால் அல்லது அந்தத் தீர்ப்பில் அதிருப்தி அடைந்தால், ஐ.ஆர்.டி.ஏ.ஐ-ன் நுகர்வோர் விவகாரத் துறையின் குறை தீர்க்கும் பிரிவை அணுகலாம்.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ

புதிய விதிமுறைகளின்படி பாலிசிதாரர்களின் புகார் நிலையை ஆன்லைனில் கண்காணிக்க இது உதவுகிறது. மேலும், ஒம்பூட்ஸ்மேன், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார் செய்வது எப்படி?

ஐ.ஆர்.டி.ஐ.ஏ-ன் ஆன்லைன் போர்ட்டலைப் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். அதாவது, ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் முறை (ஐ.ஜி.எம்.எஸ்): மூலம் புகாரை https://www.policyholder.gov.in/Report.aspx# இல் பதிவு செய்யாலம்.

மின்னஞ்சல் மூலம் complaints@irdai.gov.in என்ற முகவரிக்கு புகரை அனுப்பலாம். கட்டணமில்லா எண் 155255 (அல்லது) 1800 4254 73 ஐ அழைக்கவும்.

பாலிசிதாரர்கள் புகார்

உங்கள் புகாருடன் ஐ.ஆர்.டி.ஏ.ஐ-க்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டுமானால் https://www.policyholder.gov.in/uploads/CEDocuments/complaintform.pdf என்கிற படிவத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

-க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.