இந்தியா டுடே நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊழலற்ற ஆட்சியை கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘’காந்தி, காமராஜர் போன்றோர் ஏழைகளின் தலைவராக இருந்தனர்; நாங்களும் அப்படித்தான். எம்.எல்.ஏ ஆனபின் எம்.ஜி.ஆர் சுமார் 50 படங்களில் நடித்தார். சினிமா எனது தொழில்; ஆனால் அரசியல் எனது நோக்கம். வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்’’ என்று கூறினார்.

மேலும், தேர்தலில் தோற்றால் அரசியலிலிருந்து விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு, ’’இல்லை; எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன்; தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்’’ என்று கூறினார். ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து கேட்டபோது, ’’நல்லவர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தேன். அதேசமயம் அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியாது. அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் நல்ல முன்னுதாரணம்; திமுக, அதிமுகவில் சில நல்லவர்களும் உள்ளனர்’’ என்று பதிலளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.