தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பேரத்தை கட்சிகள் கிடத்தட்ட நிறைவு செய்யும் நிலையில் உள்ளன. வெற்றியை அடிப்படையாக கொண்டு கூட்டணி கணக்குகள் முடிவு செய்யப்படுகின்றன. சொல்லப்போனால், சிறந்த திட்டங்களும் சில நேரங்களில், சில காரணங்களுக்காக கைவிட்டு போகக்கூடும். அவற்றில் சில, கட்சிகளின் கட்டுபாட்டுக்கு அப்பாற்பட்டவை. தமிழகத் தேர்தலில் ‘எண்கள்’ எந்த அளவுக்கு முக்கியத்துவம் வகிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

காலங்களுக்கு இடையே தெளிவான வடிவம் ஒன்று உள்ளது. அது, 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்தார். அதேபோல 2016-ம் ஆண்டு ஜெயலலிதா தனது இறுதி மூச்சை அப்போலோ மருத்துவமனையில் நிறுத்திக்கொண்டார். சுழற்சி முறையில் அதிமுக, திமுக மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வந்த நிலையில், 2016-ம் ஆண்டு தேர்தலில் இந்தப் போக்கை உடைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றியை பதிவுசெய்தார் ஜெயலலிதா.

எழுதப்படாத ஒருமித்த கருத்தும், ஜனரஞ்சக கொள்கைகளும்:

1991 தாராளமயமாக்கலுக்கு முன்னும் பின்னும் தமிழகம் எப்போதும் அதிக வளர்ச்சி விகிதங்களை அனுபவித்து வருகிறது. 1967-க்குப் பிறகு தமிழகத்தில் ‘குத்தகை’க்கு எடுத்த இந்த இரண்டு கட்சிகளே இதற்குக் காரணமாக அமைந்தன. தமிழகத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் அரசு பொருள்கள் இலவசங்கள் என்ற பெயரில் விநியோகிக்கப்படுகின்றன என பலரும் குற்றம்சாட்டி வருகின்றன. மருத்துவம், உணவு மற்றும் பொது வேலைவாய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் பொருள்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்களின் முக்கியக் கூறுகள்.

image

கட்டைவிரல் விதியின்படி (Rule of thumb) ஒரு வாக்குச் சாவடியில் (சுமார் 800 முதல் 1,000 வாக்குகள் உள்ளன) ஒரு கட்சி ஊழியர் குறைந்தது 60 முதல் 70 வாக்காளர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதன்படி பார்க்கும்போது, பொதுவாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், கட்சி சார்பில் ஐந்து முதல் 10 கட்சி ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அடிப்படையில் மக்களுக்கான திட்டங்களை அவர்களிடம் எந்தச் சிக்கலும் இல்லாமல் கொண்டு செல்லும் நடைமுறை இது. இந்த நடைமுறை 1960களில் திமுகவால் தொடங்கப்பட்டது, பின்னர் பெரும்பாலான கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஏற்பாட்டின் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், ஆண்டு முழுவதும், பூத் அளவிலான தொழிலாளர்கள் பொருள்கள் மற்றும் நலத்திட்டங்களை விநியோகிக்க வசதி செய்யப்படும் என்பதே.

திராவிட சித்தாந்தமும், மறுவிநியோக அரசியலும்!

1967-ம் ஆண்டு திமுக நிறுவனர் அண்ணா ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்தார். இது மிகப்பெரிய அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சக போட்டியாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. பின்னர், தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா முதல்வரானபோது, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தினார். இருந்தபோதிலும், நிதிச்சுமை காரணமாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

image

இதையடுத்து, பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், மதிய உணவுத் திட்டத்தை, சத்துணவுத் திட்டம் என மாற்றியமைத்தார். இது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க காரணமாக அமைந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக கை ரிக்‌ஷாவுக்கு முடிவுரை எழுதியது. இது மனித்தன்மையற்ற செயல் என்று கூறி இந்த நடைமுறை ஒழிக்கப்பட்டது. இது திராவிட சிந்தாந்தத்தின் சமூக நீதி சிந்தனைக்கான மற்றொரு திட்டமாகும்.

தெலுங்கு – கங்கா நீர் திட்டத்தின் மூலம் குடிநீரை மாநிலத் தலைநகருக்கு கொண்டு வருவதாக எம்.ஜி.ஆர் அறிவித்திருந்தார். ஆனால், ஆந்திராவிருந்து எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. இதையடுத்து, மற்றொரு திட்டத்தை வகுத்தார் எம்.ஜி.ஆர். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் விதமாக இலவசமாக தண்ணீர் கேன்களை வழங்கினார். அதேபோல நாள்தோறும் டேங்கர் லாரிகள் மூலம் வீடுகளுக்கே சென்று தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தையும் அமல்படுத்தினார்.

image

இலவசங்கள் கெட்ட வார்த்தைகளா?

2006-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, அப்போது மத்தியிலிருந்து ஐக்கிய முற்போக்கு அரசுடன் கூட்டணியில் அங்கம் வகித்தது. மத்திய அரசிடமிருந்து தேவையான நிதி உதவியைப் பெறுவதில் திமுக உறுதியாக இருந்த நிலையில், அப்போதைய முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை அறிவித்தார். விலையில்லா வண்ணத் தொலைக்காட்சிகள், (இலவசம் என அவதூறாக குறிப்பிடப்படும்) 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, நிலமற்றவர்களுக்கு நிலம், இலவச எரிவாயு அடுப்புகள், வேலையில்லாதவர்களுக்கு ரூ.300, ஏழைப் பெண்களுக்கு மகப்பேறு / குழந்தை பிறந்த காலத்திற்கு உதவித்தொகை, மற்றும் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் ஆகியவை இதில் அடங்கும்.

அதன்பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார். பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள், லேப்டாப், மாணவிகளுக்கு சுகாதார நாப்கின்கள் வரை மாறுபட்ட திட்டங்களை கொண்டுவந்தார் ஜெயலலிதா. இது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பெண் குழந்தைகளின் கல்வி வீதத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

image

உலகளவில் ஜனநாயகங்களை வளர்ப்பதில் மக்களுக்கான அரசியல் என்பது ஒரு முக்கிய வடிவமாகும். இதில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வளங்களை (பட்ஜெட்) நேரடியாக வழங்குகின்றன. இதற்கு ஈடாக வாக்காளர்கள் அரசியல் அமைப்பின் மறைமுக ஆதரவாளர்களாக மாறுகிறார்கள். இது தமிழகத்தின் உண்மையான மந்திரமாக இருந்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளும், தமிழகத்தின் இந்த தந்திரங்களை பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன.

வாக்காளர்களுக்கு நேரடியாகவும், சட்டப்பேரவை ஒப்புதலின் அடிப்படையிலும் அளிக்கப்படும் வாக்குறுதிகள், சம்பந்தப்பட்ட கட்சிகள் கணிசமான வாக்குகளை பெற காரணமாகின்றன என அரசியல் அறிவியலில் கோட்பாடுகள் விளக்குகின்றன. முன்னணி கட்சிகளான திமுக மற்றும் அதிமுக – ஒரு பொதுவான சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொள்வது மாநிலத்தின் மற்ற கட்சிகளுக்கான இடத்துக்கான தேவையை இல்லாமல் ஆக்குகிறது.

– வெங்கடராகவன் ஸ்ரீனிவாசன்

Source: The Federal

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.