- தமிழகத்தில் எந்தக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ்நவ் – சி வோட்டர்ஸ் இணைந்து நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. அதில் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் – சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
- திமுக கூட்டணியுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி உடன்பாடு இன்னும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூறியிருக்கிறார். மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > திமுக கூட்டணி: உடன்பாடு எட்டப்படாத நிலையில் கொ.ம.தே.க; மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி
- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கட்சி அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் யுடன் கூட்டணி அமைக்க உள்ளது. விரிவாக வாசிக்க > அமமுக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
- குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
- அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விரிவாக வாசிக்க > தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டம்?