மதுரை ஜல்லிக்கட்டு போட்டியை போல் சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டிகள் விமர்சையாக நடைபெறும். ஆண்டு முழுதும் பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றாலும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்களுக்கு எந்த பகுதியில் எப்போதும் மஞ்சுவிரட்டு போட்டி என்று தெரிந்துவிடும். இதனால் மஞ்சுவிரட்டு போட்டிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை விட அதிகளவு கூட்டம் கூடும்.

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10-ம் நாளில் நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டை முல்லைமங்கலம், சதுர்வேதமங்கலம், கண்ண மங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் ஆகிய ஐந்துநிலை நாட்டார்கள் சேர்ந்து தொன்று தொட்டு நடத்தி வருகின்றனர்.

அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டில் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் காளைகளுக்கு மரியாதை செய்து காளைகளுக்கும் வேஷ்டி, துண்டு வழங்கப்பட்டது. பிறகு, தொழுவத்தில் இருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும், மற்ற காளைகள் தொடர்ந்து அவிழ்க்கப்பட்டன.

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு

தொழுவில் இருந்து பதிவு செய்யப்பட்ட 111 மாடுகள் மட்டும் ஜல்லிகட்டு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. எனினும் ஆங்காங்கே வயல்வெளிகளிலும் ஆயித்திற்கும்க்கும் மேற்பட்ட மாடுகள், கட்டு மாடுகளாகளாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சீறி பாய்ந்து சென்ற மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் திருப்பத்தூர் புதூரைச் சேர்ந்த சேது (45), ஆத்தங்குடியைச் சேர்ந்த அஜித்குமார் (26), நாமனூரைச் சேர்ந்த மருது (40), மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்த மகேஷ் (23) ஆகிய 4 பேர் பலியானர்கள். மேலும் 94 பேர் காயமடைந்தனர். மலை குன்றின் மீது அமர்ந்து பல்லாயிரக்கணான பெண்கள், சிறுவர்கள் மஞ்சுவிரட்டை பார்த்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.