கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையிலிருந்து திடீரென விலகியது இலங்கை. இந்தப் பேரவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில், நடப்பு அமர்வில் இலங்கை மீண்டும் ஒரு தீர்மானத்தை எதிர்கொள்கிறது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக ஆதரவை திரட்டும் வகையில், இந்தியாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை. இந்த தீர்மானமானது எப்படிச் சென்றாலும், இந்திய – இலங்கை உறவிலும், தமிழகத்தில் நடைபெறும் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

ஜனவரி 27-ம் தேதி மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா.-வின் மனித உரிமைகள் அமைப்பிற்கான துணைத் தூதரின் அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையில், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை நிவர்த்தி செய்ய இலங்கை தவறிவிட்டது என குற்றம்சாட்டபட்டது. மேலும், நாட்டை ஓர் ஆபத்தான பாதையில் கொண்டு செல்வதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூகத்தினரை அச்சுறுத்துதல் மற்றும் அரசாங்க செயல்பாடுகளை ராணுவமயமாக்குதல், அரசியல் சாசன பாதுகாப்பினை மாற்றி அமைத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை பயன்படுத்துதல் போன்றவற்றை கோடிட்டு காட்டப்பட்டுள்ள அந்த அறிக்கையானது எச்சரிக்கும் தொனியில் இருந்தது.

நாட்டின் முக்கியமான 28 பதவிகளுக்கு முன்னாள் அல்லது இந்நாள் உளவுத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளை நியமித்திருப்பதை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகளின் உயர் ஆணையாரான மிச்சேல் பச்சேலட், இலங்கையின் தற்போதைய அரசு, முந்தைய கால குற்றங்களை விசாரிப்பதற்கு தடையாக செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். நீதிக்காக காத்திருக்கும் மக்களுக்கும், இழப்புகளை சந்தித்தவர்களுக்கு இலங்கை அரசு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மேலும் ஐ.நா உறுப்பு நாடுகள், அத்துமீறல்களின் ஆரம்பகால எச்சரிக்கை குறித்து செவிசாய்க்க வேண்டும் என்று பேச்லெட் கூறியுள்ளார்.

இலங்கையில் 26 ஆண்டு காலமாக நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்பேற்கச் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தை எதிர்கொள்ள உள்ளது இலங்கை. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், இந்தத் தீர்மானத்தின் வரைவை வெளியிட்டுள்ளன.

இந்த வரைவு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் நான்கு வார வசந்த கால கூட்டத் தொடரின் இறுதியில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசந்த கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை முதல் ஜெனீவாவில் தொடங்கியுள்ளது.

சர்வதேச அளவிலான அழுத்தத்தினால், கடந்த 2015-ம் ஆண்டு போர்க் குற்றம் மற்றும் விதிமீறல்களை, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க ஒப்புக் கொண்டது இலங்கை அரசு. இது ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைய தீர்மானத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, சிங்களப் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின், இந்த ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் இருந்து, கடந்த பிப்ரவரி 2020-ல் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீதான நாடுகள் தழுவிய தீர்மானங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியா 2012-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியில் திமுக இடம் பெற்றிருந்தது. 2014-இல் இருந்து விலகியது. 2015-ஆம் ஆண்டில் இலங்கை 30/1 தீர்மானத்தில் இணைந்தபோது இது குழப்பத்திலிருந்து விடுபட்டது.

தமிழகத்தில் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்தியத் தலைவர் நான்தான் என்று அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் இலங்கை மீதான தீர்மானம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.