தான் தத்தெடுத்த பார்வைக் குறைபாடு உள்ள நாயை கவனித்துக் கொள்வதற்காக லக்னோவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் சாலையில் படுகாயமடைந்த ஒரு நாயை மீட்டுள்ளார் இளைஞர் மிலிந்த் ராஜ். ஜோஜோ என்ற பெயரிடப்பட்ட அந்த நாயை முன்னதாக மர்ம நபர்கள் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில் நாயின் காதுகேட்கும் திறனும், பார்வைத்திறனும் பறிபோனது. அந்த நேரத்தில் தான் மிலிந்த் ராஜ், ஜோஜோவை மீட்டுள்ளார். கடுமையான தாக்குதலை சந்தித்த ஜோஜோ, மனிதர்களை கண்டாலே வெறுத்து ஒதுக்கியுள்ளது. மனிதர்களைக் கண்டாலே பயந்து ஓடியது. இதற்கு ஏதேனும் வழிக்கண்டுபிடிக்க நினைத்த இளைஞர் மிலிந்த் ராஜ், ஜோஜோவை பராமரிக்க ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ சரியான இடைவெளியில் ஜோஜோவுக்கு உணவு ஊட்டும்.

image

இது குறித்து தெரிவித்துள்ள மிலிந்த் ராஜ், இந்த நாயை கொரோனா ஊரடங்கின்போது நான் தத்தெடுத்தேன். மனிதர்களை பார்த்தாலே பயம் கொள்கிறது. அதனால் இந்த நாய்க்காக ஒரு ரோபோவை உருவாக்கினேன். அந்த ரோபோ சரியான நேரத்தில் உணவு ஊட்டும். கவனித்துக்கொள்ளும். ஒரு உயிருக்கும், டெக்னாலஜிக்கும் இடையேயான அழகான உறவு இது எனத் தெரிவித்துள்ளார்.

image

ட்ரோன் மேன் என்று அழைக்கப்படும் மிலிந்த் ராஜ், ரோபோ தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உடையவர். இவர், முன்னாள் குடியரசுத்தலைவரும், ஏவுகணை நாயகருமான அப்துல்கலாமிடம் விருது பெற்றுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.