தூத்துக்குடி: சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி மணியாச்சி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெல்லையில் இருந்து விவசாய பணிக்காக சரக்கு வாகனத்தில் சென்ற போது விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM