தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் எங்களோடு ஒத்துவரும் கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா பேசினார்.

மதுரையில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்ச்சி மதுரை ரிங்ரோடு வாஜ்பாய் திடலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசியதாவது, “காலையில் மீனாட்சி அம்மன் கோயில் சென்று அம்மனின் ஆசி பெற்றதோடு இப்போது உங்களது ஆசியையும் நான் பெற்றுள்ளேன். நாடு முழுவதும் நேற்று முன்தினம் நாம் தைப்பூசம் கொண்டாடினோம். இன்று காந்தி நினைவு தினத்தை கொண்டாடுகிறோம். மதுரைக்கும் காந்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு இங்கு தான் அவர் தனது மேலாடையை துறந்தார்.

மதுரைக்கு பல சிறப்புகள் உண்டு இங்குதான் 64 திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது . இங்குதான் மீனாட்சிஅம்மன் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார், ராணிமங்கம்மாள் ஆட்சி புரிந்த இடம் இது. சேரர்,சோழர், பாண்டியர் மன்னர்கள் இங்கு ஆட்சி செய்ததோடு தமிழ் கலாச்சாரத்தையும் அதன் பெருமையையும் கட்டிக் காப்பதில் பெரும் முயற்சி எடுத்தார்கள்.

image

பிரதமர் மோடி எப்போதுமே தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் எந்த இடத்திற்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டிதான் பேசுவார். அவர் தமிழகத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார் 14-வது நிதிக் கமிஷனில் இதுவரை இல்லாத அளவுக்கு ஐந்து மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளார். நெசவு தொழில் அதிகம் உள்ள தமிழகத்திற்கு 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.

இதுபோல் பாதுகாப்பு வளாகத்தில் கவனம் செலுத்தி சென்னை சேலம் ஓசூர் போன்ற நகரங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளார். பாஜக-அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கிறோம். மாநில வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்துவோம். தமிழ்நாடு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். அதிமுக பாஜகவுடன் சேர்ந்து தேசிய நீரோட்டத்தில் சேர்ந்தால் நாட்டிற்கு தேவையான வளர்ச்சியை மேம்படுத்தலாம். அதற்கு பாஜகவை ஆதரிக்க வேண்டும், இங்கு கூடியுள்ள கூட்டம் ஓட்டாக கொடுத்து ஆதரவாக மாறவேண்டும்

அதேபோல சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் , தேஜஷ் இரயில் , சென்னை மதுரை இணைக்கின்ற நான்கு வழிச் சாலைகள் மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பட்டுள்ளது.  கடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர் மோடி அவர்களின் விசேஷத்தின் காலமாக தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. திராவிட முன்னேற்ற கழகம் தமிழர் விரோத , தேசவிரோத கட்சி. விபூதி , குங்குமத்தை அவமதிக்கும் திமுக தலைவர் தற்போது தேர்தல் வந்தவுடன் வேலை தூக்குகின்றார். நாடு முழுவதும் கட்டப்பட்டு இருக்கின்ற கழிப்பறைகளில் 9 கோடியில் தமிழகத்தில் மாத்திரம் 56 லட்சம் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது

அதே மாதிரி பிரதம மந்திரி வங்கி கணக்கு திட்டம் நாடு முழுவதும் 42 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால் தமிழகத்தில் மாத்திரம் 95 இலட்சம் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு இருக்கிறது. அதே மாதிரி சமையல் எரிவாயு இணைப்பு  30 லட்சம் தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 லட்சம் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது

image

மதுரைக்கு 1200 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை கொடுக்கப்பட்டுள்ளது. நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது அத்திட்டம் கொடுக்கப்பட்டது, அதனை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான் இந்த மதுரைக்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் மதுரைக்கு கூடுதலாக ஆண்டுக்கு 100 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

சிறந்த தொழில் முனைவோராக, தொழில் மேம்பாடு, பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதோடு தமிழ் கலாச்சாரத்தையும் முன்னேற்றி உள்ளனர். இங்கு நாம் உலகமே ஒரு குடும்பம் வசுதைவ குடும்பகம் என்று சொல்லுவதை களி பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழை நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார் அதேபோல பிரதமர் மோடி அவர்கள் செல்லும் இடத்திலெல்லாம் தமிழ் மொழி , திருவள்ளுவரைப் பற்றி மேற்கோள் காட்டிப் பேசுகிறார். லடாக்கில் ராணுவ வீரர்களிடம் பேசும்போது கூட நமது தமிழ் மொழியின் சிறப்பு குறித்து தான் பாரதப் பிரதமர் பேசுகின்றார்” என தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, விழா மேடையில் தனது உரையை தொடங்குவதற்கு முன்னர் வெற்றி வெற்றி வெற்றி வேல், வீர வீர வீர வேல், வணக்கம் என தமிழில் பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.