”தற்போது மக்களிடம் பெறும் மனுக்களை பெட்டியில் பூட்டிவைத்துள்ளேன். திமுக ஆட்சி அமைந்ததும் தனியாக  ஒரு  இலாகா உருவாக்கி, இந்த மனுக்களில் உள்ள பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைப்பேன்” என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நான் நலம், நீங்கள் நலமா.  நான் ரெடி, நீங்கள் ரெடியா என்று கேட்டு தன் உரையைத் தொடங்கினார். மனுக்களை கொடுக்கும்போது உங்களுக்கு ரசீது கொடுக்கப்படும் , உங்கள் மனுக்களுக்கு நான் பதில்  சொல்வேன் என்று கூறிய ஸ்டாலின், பொதுமக்கள் கொடுத்த மனுக்களில் இருந்து சில பெயர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் குறைகளை கேட்டு சிலவற்றிற்க்கு பதிலளித்தார்.

கனிமொழி என்கிற ஒரு பெண்மணி கல்விக்கடன் பெற்று கல்வி பயின்றதாகவும் தற்போது வேலை கிடைக்கவில்லை என்றும் ஆனால் வங்கிகள் கல்விக் கடனை கட்ட சொல்லி துன்புறுத்துகிறார்கள் எனவே கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கையில்  தேர்தல் வாக்குறுதி அளித்தது போல  கல்வி கடன் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னோம்.  கலைஞரின் மகனாக தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார்.

image

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், வேளாண் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி இங்குதான் உள்ளார். சேவூர் ராமச்சந்திரன்  என்ற மந்திரியும் அதிகம் லஞ்சம் வாங்குபவர் என்று குற்றம் சாட்டினார். திருவண்ணாமலையில் பூக்கள் அதிகம் விளைவதால் சென்ட் பேக்டரி ஆரம்பிக்க ஒரு பெண்மணி வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் அந்த பேக்டரிக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு மட்டுமல்ல திறப்பு விழாவிற்க்கும் நான் தான் வருவேன் என்று பதிலளித்தார். 

இப்போது அரசியல் உள்நோக்கத்தோடு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசியல் பாகுபாடின்றி தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகையை இந்த வழங்குவேன் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார். ஒரு பெண்மணி தனக்கு வீடு இல்லை என்றும், ஒரு வீடு கட்டித் தருமாறும் கோரினார் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட மக்கள்  ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் பலதரப்பட்ட குறைகளை மனுவாக அளித்துள்ளீர்கள். இவைகள்  அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  செய்து முடித்துக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்றார். தமிழகம் முழுவதும் டிஆர்பி படித்து தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணி கொடுக்கச் சொல்லி முதலமைச்சரிடம்  கேட்டும் இதுவரை பணி வழங்கப்படவில்லை, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

image

தண்ணீர் இல்லாத காடு என்று அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை, தண்ணீர் நிறைந்த மாவட்டமாக மாற்றியது திமுக ஆட்சி என்று ஸ்டாலின் கூறினார். நான் உறுதியளித்தபடி முதல் 100 நாட்களில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பொதுமக்களின் குறைகளை தீர்க்கபடும் என்ற உறுதியளித்தேன், உங்களின் மனுக்களை பெறுவதற்காக இன்று திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறேன்   கண்டிப்பாக முடிப்பேன் என்றார்.

நீங்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தும் ஒரு பெட்டிக்குள் போட்டு பூட்டப்பட்டுள்ளது, இந்த சாவி என்னிடம் உள்ளது, இதை நான் ஆட்சிக்கு வந்ததும் திறந்து 100 நாட்களுக்குள் இந்த மனுக்களில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என்று ஸ்டாலின் கூறினார். பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்த பெட்டியை நானே திறந்து இதற்கென தனியாக ஒரு இலாக்கா  உருவாக்கி ஒரு குழு அமைத்து அடிப்படைப் பிரச்சினைகளையும் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைப்பேன் என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.