சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 37, 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று 37, 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 40 ரூபாய் குறைந்து 37,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,660 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 4,655 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 40,312 ரூபாயாகவும், கிராமுக்கு 5,039 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் விலை நிலவரத்தை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை 71,400 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 71.40 காசுகளாவும் உள்ளது.