கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் மற்றும் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட  அணியின் முன்னாள் வீரர் பீலேவின் நிஜக்கதை ‘பீலே’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. இதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்ய உள்ளது. இ ப்போது இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 

பீலே எப்படி கால்பந்தாட்ட உலகின் அரசனானார் என்பது அவரது பதின் பருவத்திலிருந்து இந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை David Tryhorn மற்றும் Ben Nicholas இயக்கி உள்ளனர். பீலே பிரேசில் அணிக்காக விளையாடிய போது அவருடன் விளையாடிய சக வீரர்களின் பேட்டி, பீலேவின் பேட்டி என இந்த ஆவணப்படம் அமர்க்களமாக வெளிவர உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 

பிரேசிலுக்காக 1958, 1962 மற்றும் 1970 ஃபிபா உலக கோப்பையை பீலே வென்று கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. 1957 முதல் 1971 வரை பிரேசில் அணிக்காக 92 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதில் நான்கு உலக கோப்பை தொடரும் அடங்கும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.