இன்று முதல் 3 நாட்கள் மெரினா செல்லத் தடை

பொங்கலையொட்டி மெரினா கடற்கரை, கிண்டி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவலால் முன்னதாக காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. ஆனால் வார விடுமுறை என்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்பிருப்பதாக கூறி காணும் பொங்கலுடன் இரண்டு நாட்கள் சேர்த்து, அதாவது ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்து.

image

இந்நிலையில் அந்த தடை உத்தரவானது இன்று அமலுக்கு வந்துள்ளது. மேலும் வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்காவிலும் மக்கள் கூட அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM