கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் படம் கன்னட மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஹிட் அடித்தது. கடந்த வாரத்தில் வெளியான கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் டீஸரும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக நடிகர் யாஷ் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கே.ஜி.எஃப்

தமிழகத்திலுள்ள பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலர், “பவர்ஃபுல் பீப்புள் கம்ஸ் ஃப்ரம் பவர்ஃபுல் பிளேஸ்”, “2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக நடிகர் யாஷ் பிரசாரம் செய்யவுள்ளார்” எனப் பல கருத்துகளைப் பதிவிட்டு இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையிலேயே நடிகர் யாஷ் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாரா..?

2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் யாஷ் பிரசாரம் செய்தது உண்மைதான். ஆனால், அவர் பா.ஜ.க வேட்பாளருக்கு மட்டுமல்ல மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளருக்கும் பிரசாரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்குகூட பிரசாரம் செய்துள்ளார் நடிகர் யாஷ். இது குறித்துப் பல செய்தி நிறுவனங்கள் அவர் பிரசாரம் செய்த சமயத்திலேயே செய்தி வெளியிட்டுள்ளன.

பா.ஜ.க பிரசாரத்தில் யாஷ்

Also Read: `பா.ஜ.க வென்ற இடங்களில் கல்வித்தரத்தை உயர்த்துவோம்’ – இப்படிச் சொன்னாரா பினராயி விஜயன்?!

2018 பிரசாரம்!

2018 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் எஸ்.ஆர்.மகேஷை ஆதரித்து கிருஷ்ண ராஜா நகர் தொகுதியில் பிரசாரம் செய்திருக்கிறார் நடிகர் யாஷ். அதே தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்தாஸ் என்பவரை ஆதரித்து மைசூரில் பிரசாரம் செய்திருக்கிறார் அவர். இது குறித்து கன்னட, ஆங்கில செய்தி ஊடகங்கள் அந்தச் சமயத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி

சில ஆங்கில ஊடகங்கள், 2018 சட்டமன்றத் தேர்தலில் யாஷ் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவருக்கும் பிரசாரம் செய்யவிருப்பதாகக்கூட செய்தி வெளியிட்டுள்ளன.

பல கட்சி வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்வது குறித்து அந்த சமயத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த யாஷ், “வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு நான் பிரசாரம் செய்வதால் வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்படும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நல்ல வேட்பாளர்கள், வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்களுக்கு நான் பிரசாரம் செய்வேன்” என்று கூறியுள்ளார். மேலும்,

2019 பிரசாரம்!

2019 நாடாளுமன்றத் தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதா அம்ப்ரீஷ். இவருக்கு ஆதரவளித்தும் பிரசாரம் செய்துள்ளார் நடிகர் யாஷ். இந்தத் தேர்தலில், சுமலதாவை எதிர்த்துப் போட்டியிட்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில். யாஷ் உள்ளிட்ட நடிகர்களின் ஆதரவோடு போட்டியிட்ட காரணத்தால் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றார் சுமலதா.

நடிகர் யாஷ், நடிகை சுமலதா

Also Read: அமைச்சர் வேலுமணியின் ரூ.200 கோடி பங்களா… வைரலாகும் வீடியோ! – உண்மை என்ன? #VikatanFactCheck

முடிவு!

நமக்குக் கிடைத்த செய்திகளை வைத்துப் பார்க்கும் போது `நடிகர் யாஷ் பா.ஜ.க ஆதரவாளர்’ என்று பரவிய தகவல்கள் போலியானது. அவர் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவானவராக இல்லை என்பதும் வேட்பாளர்களை மனதில் வைத்தே பிரசாரம் செய்தார் என்பதும் யாஷ் அளித்த பேட்டியின் மூலமே தெளிவாகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.