பறவை காய்ச்சல் பரவல் குறித்த ஆலோசனைகளை மாநில அரசாங்கத்திற்கு மத்திய அரசு  வழங்கியுள்ளதாக, மத்திய கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன் வள அமைச்சகத்தின் அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவ காரணமே புலம்பெயர்ந்து வரும் வலசை பறவைகள் தான் எனவும் அவர் சொல்லியுள்ளார்.

image

“பறவை காய்ச்சல்  பரவல் என்பது உலகம் முழுவதுமே உள்ளது. இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவல் அறவே இல்லை என கடந்த செப்டம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அக்டோபர் மாத பனி காலத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசாங்கம் அனைத்திற்கும் ஆலோசனை கொடுத்திருந்தோம். இன்று பறவை காய்ச்சல் பரவல் குறித்த புகார் எழுந்து வரும் பகுதிகளில்தான் புலம்பெயர்ந்து வரும் வலசை பறவைகள் வருவது வாடிக்கை. இப்போது ஏற்பட்டுள்ள பரவலுக்கும் அதுதான் காரணம். 

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில்தான் 25000 வாத்துகள் இந்த காய்ச்சலினால் உயிரிழந்துள்ளன. அரசாங்கம் கவனத்துடன் இந்த விவகாரத்தை கையாள்கிறது. பறவைகளிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் போபாலில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகம் அச்சம் கொள்ள தேவையில்லை. பண்ணைகளில் உயிரிழந்த பறவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

image

இதுவரை இந்த காய்ச்சல் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதில்லை. இந்தியாவில் கடந்த 2006இல் தான் முதல்முறையாக பறவை காய்ச்சல் அறியப்பட்டது. 2015 முதல் ஆண்டுதோறும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இந்த காய்ச்சல் பறவைகளுக்கு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார் அவர். 

நன்றி : TIMES OF INDIA 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.