சின்னத்திரை நடிகை ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 14.2.2020-ல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார், சில தினங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

எஃப்ஐஆரில், “நான் (ரம்யா – பெயர் மாற்றம்) சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் வசித்து வருகிறேன். நான் கடந்த எட்டு ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்துவருகிறேன். என்னுடைய தோழி மூலமாக சென்னை கீழ்கட்டளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் எனக்கு அறிமுகமாகினார். நானும் ராஜேஷூம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம். இருவீட்டினர் சம்மத்துடன் 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி எனக்கும் ராஜேஷூக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினோம். பொது இடங்களுக்கு ஜோடியாக சென்றோம். இந்தச் சமயத்தில் ராஜேஷ், என்னைத் தொடர்பு கொண்டு நட்சத்திர விடுதி ஒன்றில் நிகழ்ச்சி நடப்பதாகக் கூறி அங்கு வரும்படி என்னை அழைத்தார். நானும் வருங்காலக் கணவர் என்ற முறையில் அங்குச் சென்றேன்.

ராஜேஷ்

அப்போது, ராஜேஷ் என்னிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோகிறோம் என்பதால் சந்தோஷமாக இருப்பதில் தவறில்லை என்று ஆசைவார்த்தைகளைக் கூறினார். என்னை முளைச் சலவை செய்த ராஜேஷ், என்னிடம் தவறாக நடந்துக் கொண்டார். அதன்பின்னர் அவருடைய நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. என்னுடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார். அதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, `என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை’ என்று கூறினார். மேலும், `சந்தோஷமாக இருக்கவே திருமண நாடகத்தை நடத்தினேன்’ என்று தெரிவித்தார். `சந்தோஷமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு, உன் சினிமா வாழ்க்கையை அழித்துவிடுவேன்’ என்று மிரட்டினார்.

`என்னைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் பத்து லட்சம் ரூபாய் தர வேண்டும்’ என்று ராஜேஷ் கூறினார். அவருடைய மிரட்டலுக்குப் பயந்து இதுவரை 2.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். இந்தப் பிரச்னை தொடர்பாக புகார் கொடுக்க முயன்றால், `ஆசீட் வீசி வாழ்க்கையைச் சீரழிப்பேன்’ என்றும் `லாரியை ஏற்றிக் கொலை செய்துவிடுவேன்’ என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் 28.1.2020-ல் புகார் கொடுத்தேன். அதன்பேரில் இருவரையும் அழைத்து போலீஸார் விசாரித்தனர். ஆனால் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

ராஜேஷ்

Also Read: சென்னை: முகத்தில் காயம்..?!- சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் போலீஸார் விசாரணை

ஏற்கெனவே மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஜனவரி 3-ல் தற்செயலாக என்னை அழைத்துச் சென்று சில காவலர்களின் உதவியோடு என்னை மிரட்டி கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிக் கொண்டார். எந்தக் காவல் நிலையம் என்றாலும் ராஜேஷ், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். எனக்கு எந்தவித உதவியும் செய்ய ஆளில்லாமல் நிற்கதியாக நிற்கிறேன். எனவே ராஜேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்படப்பட்டிருக்கிறது. புகாரின்பேரில் 28.12.2020-ல் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார், இந்திய தண்டணைச் சட்ட பிரிவுகள் 376, 417, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்திருக்கின்றனர்.

ராஜேஷ், ஈவென்ட் மேலாளராகப் பணியாற்றி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். அவரைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. ராஜேஷ் விளக்கமளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர், அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.