எஸ்யூவி வாங்க வேண்டும் என்று எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்யும். காஸ்ட்லி பார்ட்டிகளுக்குப் பிரச்னை இல்லை; மிடில் க்ளாஸ் மக்களுக்கு இருக்கும் ஒரே சிக்கல் – பட்ஜெட்டாக மட்டும்தான் இருக்கும். பட்ஜெட் பார்ட்டிகளுக்கு அப்படிப்பட்ட ஒரு வலுத்த சாய்ஸாகத்தான், மார்க்கெட்டில் சோனெட் எனும் பெயரில் ஓடிக் கொண்டிருக்கிறது. எஸ்யூவிக்கான லுக், அட, எஸ்யூவி ஜீனேதான்… 205 மிமீ அளவுக்கு செமையான கிரவுண்ட் கிளியரன்ஸ், டாப் வேரியன்ட்டில் 16 இன்ச் பெரிய வீல்கள், எஸ்யூவி என்றால் பாடி ரோலும் – ‘தகிடத் தகிட’ என்று மேடு பள்ளங்களில் ஆட்டம் போடும் என்று நினைத்தால்… அதையும் பொய்யாக்குகிறது சோனெட்.

Kia Sonet Diesel Automatic

அதாவது, சோனெட்டை எஸ்யூவியாகவே கொண்டாடலாம். வென்ட்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங், சன்ரூஃப் என்று மற்ற காம்பேக்ட் எஸ்யூவிகளை ஒப்பிடும்போது, சோனெட்டில்தான் வசதிகளையும் கூடுதலாக வைத்து காலர் தூக்குகிறது கியா. மற்ற எஸ்யூவிகளுக்கு அடுத்த செக் – பட்ஜெட்டில். ஆம்! சுமார் 17 வேரியன்ட்களில் பெட்ரோல், டீசல், டர்போ பெட்ரோல், மேனுவல், ஆட்டோமேட்டிக் என 7.71 லட்சத்தில் ஆரம்பித்து 15.5 லட்சம் (ஆன்ரோடு) வரை இருக்கிறது சோனெட். டூயல் டோனையெல்லாம் கணக்கெடுத்தால், சுமார் 23 வேரியன்ட்கள்.

Motor Vikatan Reader Arjun

அப்படியென்றால், பட்ஜெட் பார்ட்டிகளைத் தாண்டி ப்ரீமியம் வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுக்கிறது சோனெட். மிட் சைஸ் எஸ்யூவியான செல்ட்டோஸ் வைத்திருப்பவர்களைக்கூட ‘காம்பேக்ட் எஸ்யூவி வாங்கியிருக்கலாமோ’ என்று ஏங்க வைப்பதுதான் சோனெட்டின் ஸ்பெஷல். அப்படி – முதன் முறையாக எஸ்யூவி வாங்க நினைக்கும் தம்பதியர் முதல் – செல்ட்டோஸ் வைத்திருக்கும் சில வாடிக்கையாளர்கள் வரை சோனெட் பெட்ரோல் iMT மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் டிரைவ் செய்து பார்த்து, அவர்களே சொன்ன ரிவ்யூவை இந்த வீடியோவில் பாருங்க!

சோனெட் & செல்ட்டோஸ்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.