வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், கொலை மிரட்டல் விடுத்ததாக வன்னியர் சங்கத்தின் தற்போதையை மாநில துணைத் தலைவர் ஸ்டாலின் கும்பகோணம் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ம.க.ஸ்டாலின்

பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது நடைபெற்ற பிரச்னையின் காரணமாக, மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் அளித்துள்ள புகார் மனுவில், “நான் கடந்த 26-ம் தேதி கும்பகோணம் கர்ணக்கொல்லை தெருவில் உள்ள வன்னியர் சங்க கட்டடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

Also Read: `தி.மு.க-வை வெறுத்தவர் காடுவெட்டி குரு; உதயநிதிக்கு திடீர் அக்கறை ஏன்?’ – கொதிக்கும் பா.ம.க

அப்போது எனது கார் நிறுத்தியிருந்த பகுதியிலிருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து நானும் பா.ம.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கட்ராமனும் சம்பவ இடத்துக்கு ஓடி சென்று பார்த்தோம். அப்போது கர்ணக்கொல்லை தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகன் சிவா, முரளி மற்றும் சிலர் எனது கார் டிரைவர் ராஜ்குமாரை கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டிருந்தனர்.

நாங்க விடுங்க எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் என விலக்கி விட்டோம். அப்போது அதே பகுதியிலிருந்த ஒரு வீட்டிற்குள்ளேயிருந்து காடுவெட்டி குரு மகன் கனலரசன், மற்றும் 4 பேர் கையில் அரிவாளோடு வெளியே வந்தனர். வேகமாக எங்களை நோக்கி வந்தவர்கள் தகாத வார்த்தைகளை திட்டியதோடு எல்லோரையும் வெட்டுங்கடா எனவும் மிரட்டினார்.

கனலரசன் மீது புகார் புகார்

உடனடியாக நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்து விட்டேன். எனவே எங்கள் தரப்பினரை தாக்கியவர்கள் மீதும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.