சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் 397 ஆண்டுகளுக்குப் பின், மிக நெருக்கமாக வரும் அரிய வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது. இந்த இரு கிரகத்தின் ஸ்பெஷல் என்ன? அவற்றின் பயோடேட்டா என்ன?

தனக்கென்று தனியாக வளையத்துடன் சூரிய குடும்பத்தில் சுற்றிவரும் ஆறாவது கோள் சனி. தவிர வியாழனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோள் என்ற பெருமையும் சனிக்கே சேரும். பூமியைவிட ஒன்பது மடங்கு விட்டம் கொண்டது சனி.

ரோமானியர்களின் செல்வ கடவுளை குறிக்கும் வகையில் சனிக் கோளுக்கு ஆங்கிலத்தில் SATURN என பெயர் சூட்டப்பட்டது. அதன் காரணமாகவே வார நாட்களில் ஏழாவது கிரகமாக அதாவது SATUR DAY என அழைக்கப்பட்டது. அறிவியல்பூர்வமாக சனிக் கோளில் அதிக அளவில் திரவ ஹைட்ரஜனும், திரவ ஹீலியமும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனிக் கோளின் விசேஷமே அதன் வளையம்தான். ஐஸ் போன்ற குளிர்ந்த துகள்கள் அந்த வளையம் முழுவதும் காணப்படுகிறது. தவிர சனிக் கோளுக்கு என்று தனியாக 82 நிலவுகள் இருக்கின்றன. சனிக் கோளில் தண்ணீர் உள்ளதா என கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதில் சனியை சுற்றிவரும் நிலவுகளில் ஆறாவதாக இருக்கும் நிலவில் உறைந்த நிலையில் ஐஸ் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

image

இப்படி சனிக் கோள் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியாகிகொண்டே வந்தாலும், புராதன காலம்தொட்டே அந்த கோள் மீதான ஈர்ப்பு அனைத்து நாடுகளுக்கும் இருந்திருக்கிறது. பாபிலோனியரகள் சனிக் கோளின் ஒவ்வொரு நகர்வையும் கணிப்பதில் குறியாக இருந்தார்கள். கிரேக்கர்களும், ரோமானியர்களும், சனிக் கோள் குறித்த ஆய்வில் அதிக ஈடுபாடு காட்டிவந்தனர். இந்தியாவில் ஜோதிடர்களுக்கும் சனி கிரகம் மிக நெருக்கமானது. சனி கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.

வியாழன் கிரகத்தை பொருத்தவரை சூரிய குடும்பத்தில் ஐந்தாவதாக இடம் பெற்றிருக்கிறது. சூரியனுக்கு பிறகு மிகப்பெரிய கிரகம் என்ற பெருமையை பெற்றது. 79 நிலவுகளைக் கொண்டிருக்கிறது வியாழன். அவற்றில் பெரிய நிலவாக உள்ளது கனிமீடின். புதன் கோளைவிட கனிமீடினின் விட்டம் பெரியது.

image

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்போது, அதைவிட பெரிய கோளான வியாழன், 9 மணி 50 நிமிடத்தில் ஒரு சுற்றை முடித்துவிடுகிறது. அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாக வியாழன் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. வியாழனின் புற வளிமண்டலம் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிம பட்டைகளால் நிரம்பியிருக்கிறது. இதனால், வியாழன் எப்போதும் கொந்தளிப்புடன் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். இதன் விளைவாகவே வியாழனில் பெருஞ்சிவப்பு பிரதேச புயல் உருவானது என்றும், இந்த புயல் கிட்டத்தட்ட 17ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்று நிகழவுள்ள அரிய வானியல் நிகழ்வு: அதிசயத்தைக் காண நீங்க ரெடியா? 

பூமியில் இருந்து பல கோடி மைல்கள் தொலைவில் இந்த கோள்கள் இருந்தாலும், 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியை நெருங்கி வருகின்றன. அதிலும் 397 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பாகைக்கும் குறைவான தூரத்தில் இவ்விரு கோள்களும் நெருங்கி வருவது வானியல் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.