நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பெண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார்.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மூலமாக உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் இதுவரை 81 டெஸ்ட் போட்டிகள், 151 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தனக்கும் தனது மனைவி சாரா ரஹீமுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார், 30 வயதான கேன் வில்லியம்சன்.

View this post on Instagram

A post shared by Kane Williamson (@kane_s_w)


 

மனைவியின் பிரசவத்திற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வில்லியம்சன் விளையாடவில்லை. மேலும் வரும் வெள்ளியன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் குழந்தைக்குத் தந்தையான வில்லியம்சனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.