பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பன்னாட்டு பாரதி திருவிழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு பாரதி திருவிழா நாளை முதல் டிச.20 வரை யூடியூபில் இணையவழியில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மேலும், வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் திருவிழாவில் ரஜினி பங்கேற்க, நல்லிகுப்புசாமி அழைப்பு விடுத்துள்ளார். வானவில் பண்பாட்டு மையத்தின் புரவலர் என்ற முறையில் அழைப்பு விடுத்துள்ளார் நல்லி குப்புசாமி செட்டியார்.
இதனிடையே திருவண்ணாமலை அருணகிரி நாதர் கோயிலில் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணன், ரஜினியின் பிறந்த நாள் மற்றும் அவர் தொடங்க உள்ள கட்சி வெற்றி பெற வேண்டும் என சிறப்பு யாகம் நடத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM