ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரிலிருந்தது காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.

image

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று கான்பெர்ராவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயமடைந்தார். முதலில் அவருக்கு முழங்கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதன்பின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டை தாக்கியது. ஆனாலும் அவர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

image

இந்த நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.மீதமுள்ள இரண்டு டி20 போட்டியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.