1992 – “நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ… அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போயிடும்.”

1992 – “எம்பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு சிவனேன்னு நான் ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்… சொல்லாததையும் செய்வேன்”

1995 – “நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது… ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்…”

1996 – “ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது”

2017 – “நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது. சிஸ்டம் கெட்டுப்போச்சு. போர் வரும்போது பாத்துப்போம்”

2017 – “நான் தமிழனானு கேட்குறாங்க… நீங்க என்ன தமிழனாவே மாத்திட்டீங்க… எங்க மூதாதையர், அப்பா எல்லாம் கிருஷ்ணகிரில பொறந்தவங்கதான்… அதுனால நான் பச்ச தமிழன்”

2017 – “இது காலத்தின் கட்டாயம்… வரப்போர சட்டமன்றத் தேர்தல்ல தனிக் கட்சி ஆரம்பிச்சு, 234 தொகுதியிலேயும் நாம போட்டியிடுறோம்”

2018 – “கட்சி ஆரம்பிப்பது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும்”

2019 – “சிஸ்டம் சரி செய்யாம அரசிலுக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சக்கரைப் பொங்கல் வைப்பது போல் ஆகிவிடும்.”

2019 – “கட்சிக்கு ஒரு தலைவர். ஆட்சிக்கு ஒரு தலைவர். ஆட்சியில் இருப்பவர் தவறு செய்தால், அவர் பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவார்.”

2020 – “எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளதால் கொரோனா காலத்தில் மக்களைச் சந்திக்க வேண்டாமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், தமிழக மக்களுக்காக உயிரே போனாலும் நான் சந்தோஷப்படுவேன்.”

2020 – “அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். அது காலத்தின் தேவை. அது இப்போ இல்லைன்னா… எப்பவும் இல்ல. எல்லாத்தையும் மாத்தணும். தமிழகத்தின் தலையெழுத்தை மாத்த போற நாள் வந்தாச்சு!’’

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.