ரஜினியின் அரசியல் வருகை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியளித்தார்.

image

ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாறா என பல விவாரதங்கள் நடைபெற்று வந்த நிலையில் வரும் ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர்…

இந்திய குடிமகன் என்ற முறையில் ஒரு கட்சியை தொடங்கவோ, ஒரு கட்சியில் சேரவோ உரிமை உண்டு. ஆகவே ரஜினி கட்சி ஆரம்பிப்பதை தவறு என்று யாருமே சொல்லக்கூடாது. திரையுலகத்திலே அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைத்திருக்கிறது. திரையுலகத்திலே கிடைத்த வெற்றியை கூட அவர் கொஞ்சம் யோசித்து பார்த்திருக்கலாம் பார்த்திருக்கக் கூடும் ஏனென்றால் எத்தனையோ தடவை ஒத்திப் போட்டுத்தான் இப்பொழுது இந்த அறிவிப்பை வெளியிடுகிறார்.

அவர் மிகவும் போற்றுகிற கர்நாடகத்து சாய்பாபாவை போன்ற சாமியார், அவராக ஒரு படமெடுத்தார். அது ஓடவில்லை. எனவே அவருடைய ஸ்டண்ட் படங்களுக்கு கிடைத்த வெற்றி அவருடைய தெய்வீக படங்களுக்கு கிடைக்கவில்லை என்பது அவருக்குத் தெரியும். இப்பொழுது இருக்கிற அரசியல் கட்சிகளில் இல்லாத எந்த கொள்கையை அவர் சொல்லப் போகிறார் என தமிழக மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

image

நூறு வருட வரலாற்றைக் கொண்ட காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கிற பாஜக இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சிசெய்யும் திமுக, அதிமுக இருக்கிறது. 1930ல் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. 1964ல் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி இருக்கிறது. பார்வர்ட் பிளாக் இருக்கிறது. இவர்கள் அல்லாத ஒரு தெய்வீக வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி என்கிறார்.

திரையுலகத்தில் இருப்பவர்களில் எம்.ஜி.ஆரை தவிர மற்ற நடிகர்கள் ஊழலைப்பற்றி பேசினால் யாரும் நம்புவதில்லை. இருப்பினும் அவர் அரசியலில் நுழைந்திருப்பதை வரவேற்கிறேன். அவர் என்ன சொல்கிறார் என்ன திட்டங்களை வகுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆன்மிக அரசியல் என்று சொல்லும் ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைக்கிறாரா என்பது போகப்போக தெரியும்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.