மழைக்கால நோய்கள் நம்மையோ குடும்பத்தினரையோ தாக்கும்போது, நாம் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வழிகாட்டுகிறார் டாக்டர் ராஷ்மி நந்தர்கி.

கொரோனா தொற்று நோய் பேரழிவை உருவாக்கி வருவதால், அந்த நோய் எளிதில் நம்மைத் தாக்கக்கூடும் என்ற பயம் நம்மிடையே அதிகரித்திருக்கிறது. கொரோனா மட்டுமல்ல, இந்த மழைக்காலத்தில் கூடவே மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் வரவும் அதிகம் வாய்ப்புள்ளது.

ஒரு மருத்துவராக நான் செய்யும் பரிந்துரை. இதுபோன்ற நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளையும் நோய் வராமல் தடுக்கும் நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.

அதேசமயம், ஒரு நிதி ஆலோசகராக நான் சொல்ல விரும்புவது என்னவெனில், நோய் சார்ந்த செலவுகள் நம் நிதிநிலையைப் பாதிக்காமல் இருக்க நம்மிடம் எப்போதுமே மருத்துவக் காப்பீட்டு பாலிசி இருக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு மட்டும்தான் ஒருவரின் எதிர்பாராத மருத்துவமனை செலவுகள், சிகிச்சை செலவுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்கிறது.

Rain

மருத்துவக் காப்பீடு மிக அவசியம்..!

நோய் பாதிப்பு ஏற்படும்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னும் மருத்துவமனையிலிருந்து வெளிவந்த பின்னும் ஆலோசனைகள், பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் எனப் பல செலவுகள் உள்ளன. நோய் பாதிப்பு ஏற்படும்போது இந்தச் செலவுகள் சுமார் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை ஆகலாம்.

தற்போதைய கொரோனா காலத்தில் இந்தச் செலவுகள் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு. ஏனெனில், மருத்துவமனையில் பின்பற்றப்படும் அதிக கிருமி நாசினி பயன்பாடு மற்றும் பிற பரிசோதனைச் செலவுகள் கூடுதலாக உள்ளன. தற்போது பெரும்பாலானோர் நிதி நெருக்கடியில் இருப்பதால், மருத்துவக் காப்பீடு பாலிசி எதுவும் கைவசம் இல்லாதபட்சத்தில் இந்த அதிகபட்ச செலவுகளைச் கடினமாக இருக்கும். ஆனால், அடிப்படை மருத்துவ பாலிசி இருந்தால் இந்தச் செலவுகளையெல்லாம் சமாளித்துவிடலாம்.

கவரேஜ் ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம்..!

பலவகையான மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள் உள்ளன. நம்முடைய தேவைக்கு ஏற்ப சரியான பாலிசியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நோயின் தன்மை மற்றும் அதற்கான மருத்துவச் செலவுகள் அடிப்படையில் பாலிசியைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, டயர் II மற்றும் டயர் III நகரத்தில் இருப்பவராக இருந்தால், மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் மருத்துவச் செலவுகள் குறைவாகவே இருக்கும். காப்பீட்டின் கவரேஜ் தொகையைத் தீர்மானிக்கும்போது அதிகபட்ச எதிர்பாராத மருத்துவச் செலவுகளைக் காட்டிலும் கூடுதலாக நிர்ணயிப்பது நல்லது.

நடுத்தரக் குடும்பங்களுக்கு கவரேஜ் தொகையை ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை எடுத்துக்கொண்டால், முழுக் குடும்பத்துக்குமான மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியும்.

Doctors

தனிப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்

புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், கடந்த ஆண்டு, மழைக் காலங்களில் வரும் நோய் பாதிப்புகள் 82.3% உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, வைரல் ஜுரம் அதிகமாக வருகிறது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் டெங்கு பாதிப்பு 100% உயர்ந்ததால் வைரல் ஜுரம் பலமடங்கு அதிகரித்திருக்கிறது.

மேலும், மருத்துவக் காப்பீடு இல்லாத சமயங்களில் நோய் பாதிப்புக்கு ஆகும் செலவுகள் அனைத்தும் தனிப்பட்ட சேமிப்புத் தொகையிலிருந்து செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்ய முடியவில்லை எனில், உறவினர்கள் அல்லது நண்பர்களின் உதவியை நாட வேண்டிவரும்.

குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு

காப்பீட்டு நிறுவனங்கள் இப்போது குறிப்பிட்ட நோய்களுக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன. நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் அதற்கு ஆகும் செலவுகளை அதற்கான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சமாளித்துவிட முடியும். இதற்கு கணிசமான பிரீமியம் தொகையை ஒருமுறை செலுத்தினால் போதும்; நோய் பாதிப்புக்கான மருத்துவச் செலவுகளைக் காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளும்.

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் சந்தையில் கிடைக்கின்றன. தற்போது அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கும் பல காப்பீடு நிறுவனங்கள் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன.

டாக்டர் ராஷ்மி நந்தர்கி

மருத்துவக் காப்பீடு

தற்போதைய சூழலில், நோய்த்தொற்று பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதேபோல், அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில் நிதிப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். திடீர் மருத்துவச் செலவுகளால் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் சரியான நேரத்தில் காப்பீட்டுத் திட்டங்களின் உதவியால் சிகிச்சை மேற்கொண்டு நோய்ப் பாதிப்புகளிலிருந்து மீண்டுவருவது மிகவும் அவசியம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.