சட்டப்பேரவையில் ஏற்பட்ட கடும் அமளி காரணமாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட 12 தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் ஆந்திர சட்டசபையில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபை மேடையில் நுழைந்து கடும் அமளியில் ஈடுபட்டதாக ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் 12 தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிவர் புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல் குறித்த கலந்துரையாடலின்போது முரட்டுத்தனமாக நடந்துகொண்டதற்காக இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM