பிச்சாட்டூர் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடி ஆரணியாற்றில் திறக்கப்பட்டுள்ளதால் சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை பகுதிகளிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா செல்லும் தரைப்பாலம் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 40 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

image

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு வினாடிக்கு 8000 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால், அதன் மொத்த உயரமான 33 அடியில் தற்போது 29 அடி நீர் நிரம்பியுள்ளது. அங்கிருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

image

இதனால் சுருட்டப்பள்ளி தடுப்பணையில் மதகுகள் உடைந்து ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல, ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போந்தவாக்கம், கச்சூர், பெருஞ்சேரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பிரதான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

image

ஊத்துக்கோட்டை நகரத்துக்கு வரவேண்டிய அப்பகுதி மக்கள் 40 கிலோமீட்டர் சுற்றி திருவள்ளூர் சென்று அங்கிருந்து ஊத்துக்கோட்டை வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.

image

மேலும் தாழ்வான பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆங்காங்கே தீயணைப்பு, வருவாய் மற்றும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் ஆற்றின் அருகில் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்க இருப்பதால் ஆரணியாற்றின் கரையின் இருபுறங்களிலும் உள்ள கரையோர மக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.