கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்காக இந்திய கேப்டன் விராட் கோலி, சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

இதில் கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 உள்பட 5 பிரிவுகளில் விராட் கோலியின் பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தோனியின் பெயர் இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தவிர மகளிருக்கான பிரிவிலும் விருதுக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐசிசி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த வீரர், வீராங்கனைகளில் அதிக வாக்குகளைப் பெறுவோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவா்.

image

சிறந்த வீரா் விருது பரிந்துரை: விராட் கோலி (இந்தியா), ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), டி வில்லியா்ஸ் (தென்னாப்பிரிக்கா), குமார சங்ககாரா (இலங்கை).

சிறந்த ஒருநாள் வீரர் விருது பரிந்துரை: விராட் கோலி (இந்தியா), லசித் மலிங்கா (இலங்கை), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டி வில்லியா்ஸ் (தென்னாப்பிரிக்கா), ரோஹித் சா்மா (இந்தியா), எம்.எஸ்.தோனி (இந்தியா), குமார சங்ககாரா (இலங்கை).

image

சிறந்த டெஸ்ட் வீரா் விருது பரிந்துரை: விராட் கோலி (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆன்டா்சன் (இங்கிலாந்து), ரங்கனா ஹெராத் (இலங்கை), யாசிர் ஷா (பாகிஸ்தான்).

சிறந்த டி20 வீரா் விருது பரிந்துரை: ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), விராட் கோலி (இந்தியா), இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா), ஆரோன் ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா), லசித் மலிங்கா (இலங்கை), கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்), ரோஹித் சா்மா (இந்தியா).

சிறந்த வீராங்கனை விருது பரிந்துரை: எலிஸ் பெரி (ஆஸ்திரேலியா), மெக் லேனிங் (ஆஸ்திரேலியா), சூசி பேட்ஸ் (நியூஸிலாந்து), ஸ்டெஃபானி டெய்லா் (மேற்கிந்தியத் தீவுகள்), மிதாலி ராஜ் (இந்தியா), சாரா டெய்லர் (இங்கிலாந்து).

image

சிறந்த ஒருநாள் வீராங்கனை விருது பரிந்துரை: மெக் லேனிங் (ஆஸ்திரேலியா), எலிஸ் பெரி (ஆஸ்திரேலியா), மிதாலி ராஜ் (இந்தியா), சூசி பேட்ஸ் (நியூஸிலாந்து), ஸ்டெஃபானி டெய்லா் (மேற்கிந்தியத் தீவுகள்), ஜுலன் கோஸ்வாமி (இந்தியா)

ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது பரிந்துரை: விராட் கோலி (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), பிரன்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து), மிஸ்பா-உல்-ஹக் (பாகிஸ்தான்), எம்.எஸ். தோனி (இந்தியா), அனியா ஷ்ருப்சோல் (இங்கிலாந்து), கேத்தரின் பிரன்ட் (இங்கிலாந்து), மஹிலா ஜெயவா்தனே (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூஸிலாந்து).

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.