வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் சிக்கித் தவித்தவர்களை, ‘புதிய தலைமுறை’ செய்தி எதிரொலியாக போலீசார் பத்திரமாக மீட்டனர்.
‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் வெள்ள நீர் புகுந்து காட்சியளிக்கிறது. வேளச்சேரி, விஜய நகர், ராம்நகரில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றது. இதுகுறித்த செய்தி ‘புதிய தலைமுறை’யில் ஒளிபரப்பானது.
இதனைத்தொடர்ந்து, தாழ்வான வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் சிக்கிக் கொண்ட முதியவர்கள் மற்றும் குடும்பத்தினர்களை வேளச்சேரி காவல் ஆய்வாளர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் மீட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM