WWE மல்யுத்தத்தில் 90s கிட்ஸ்களின் ஆதர்ஷ நாயகனாக வலம் வந்த அண்டர்டேக்கர் சண்டைக்களத்திலிருந்து விடைபெற்றார். WWE நிர்வாகம் அவரை சிறப்பான முறையில் வழியனுப்பி வைத்தது.

30 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் கொண்டுள்ள லெஜண்ட். சண்டைக்களத்தில் துள்ளலான மியூசிக், வாணவேடிக்கை என பலர் என்ட்ரி கொடுத்தாலும், அண்டர் டேக்கரின் நுழைவு திகில் பாணியிலேயே இருக்கும். இடி மின்னல்களே அவருக்கு வாணவேடிக்கை, சாவு மணியின் சத்தமே அவருக்கு என்ட்ரி மியூசிக், இருட்டே அவருக்கு வரவேற்பு அலங்காரம்.

image

WRESTLEMANIA சண்டைகளில் அதிக வெற்றிகளைப் பெற்றவர், தனித்துவமான பாணியில் 1990 முதல் wwe உலகில் கொடி கட்டிப் பறந்து வந்த அண்டர் டேக்கர் அண்மையில் WWE இல் ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்தார். பலமுறை இது போன்ற தகவல்கள் வெளியாகிய போதிலும், முக்கியமான சில போட்டிகளின் போது அவர் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வந்தார்.

Wwe இல் வீரர்கள் ஓய்வை அறிவிப்பதும், பிறகு மீண்டும் அவர்கள் வருவதும் புதிதல்ல. ஆனால் அண்டர் டேக்கர் அறிவித்த ஓய்வு இறுதியானது. எனக்கு இன்னொரு வாழ்க்கை உள்ளது, கடின உழைப்பின் பலன்களை அந்த வாழ்க்கையில் நான் அனுபவிக்க போகிறேன். மீண்டும் சண்டை களத்திற்கு திரும்ப விருப்பமில்லை என அண்டர்டேக்கர் கூறியதாக சில பதிவுகள் அப்போது இடப்பட்டன.

image

சண்டைக் களத்தில் இருந்து ஓய்வு பெற்ற அண்டர்டேக்கரை, சர்வைவர் சீரிஸ் தொடரின் முடிவில் சிறப்பாக வழியனுப்பி வைத்தது wwe நிர்வாகம். ஷான் மைக்கேல்ஸ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அவரை வழியனுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், என் நேரம் வந்துவிட்டது, அண்டர்டேக்கர் அமைதியாக உறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக்கூறி விடைபெற்றார். wwe களத்தில் எத்தனை நட்சத்திரங்கள் ஜொலித்தாலும் அதில் சூரியனாக வலம் வந்தார் அண்டர்டேக்கர் என்றால் அது மிகையாகது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.