தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

image

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின்படி அரசானது தளர்வுகளை அறிவித்து வருகிறது. கொரோனாத் தொற்று ஆரம்பமான மத்தியப்பகுதி மற்றும் அதற்கு பிந்தைய மாதங்களில் தினசரி 5000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்று 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,54,460 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 2,07,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாகி இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,572 பேர். தமிழகத்தில் மொத்தம் இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,25,258 பேர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,454 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,758 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய அளவில் பார்த்தோம் என்றால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து 41 வது நாளாக அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை – 4,85,547

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை- 44,879

குணமடைவோரின் எண்ணிக்கை – 49,079

மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை – 81,15,580

உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 547

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.