பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் `வின்ட்ஸர் காசில்’ மாளிகையில் `ஹவுஸ் கீப்பிங்’ பணிக்கு தகுந்த ஆள் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையில்தான் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் தன் வார இறுதி நாள்களைச் செலவிடுவார். மேலும், தன் நிர்வாகப் பணிகள் சிலவற்றையும் அங்கிருந்துதான் கவனிப்பார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாளிகையில் ஒரே ஒரு ஹவுஸ் கீப்பிங் பணியிடம் காலியாக உள்ளது. அதற்குத் தகுந்த ஊழியர் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதிலென்ன பெரிய ஆச்சர்யம் இருக்கிறது. எல்லா வேலைவாய்ப்பைப் போல இதுவும் ஒன்றுதானே என்று தோன்றலாம். அதுதான் இல்லை. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியருக்கான சம்பளம், சலுகைகள் அனைத்தும் பிரம்மிக்க வைக்கின்றன.

இரண்டாம் நிலை அப்ரென்டிஸ்ஷிப் பணியிடம் இது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை. மாளிகையிலேயே தங்குமிடம், உணவு வழங்கப்படும். மேலும் வருடத்துக்கு 33 நாள்கள் விடுமுறையும் பயணப்படியும் உண்டு.

house keeping

இந்த ஹவுஸ் கீப்பிங் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிலும் ஒரு ட்விஸ்ட்! ஒருவேளை அந்த நபர் தகுதியானவராக இருந்து படிப்பு மட்டும் இல்லையென்றால், பயிற்சிக்காலத்தில் அந்தக் கல்வித்தகுதியைப் பெறுவதற்கான உதவியை ராஜ குடும்பமே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மொத்தம் 13 மாதங்கள் பயிற்சிக் காலம். பயிற்சிக் காலம் நிறைவுபெற்றதும் அந்த நபர் ராஜ குடும்பத்தின் நிரந்தர ஊழியராக நியமிக்கப்பட்டு, அங்கிருக்கும் ஹவுஸ் கீப்பிங் அணியுடன் இணைந்து பணியாற்றுவார்.

அப்படி என்னதான் வேலை!

`ஹவுஸ் கீப்பிங்’ பணியிடத்துக்கு நியமிக்கப்படும் அந்த நபருக்கு ஒரே ஒரு வேலை மட்டும்தான். மாளிகையின் உள்ளே இருக்கும் இன்டீரியர் பொருள்களையெல்லாம் துடைத்து சுத்தமாக வைக்க வேண்டும்.

Job vacancy

எல்லாம் சொல்லியாச்சு… முக்கியமான விஷயம் சம்பளம் எவ்ளோன்னு தெரிய வேண்டாமா? ஆரம்ப நிலை சம்பளம் ஒரு மாதத்துக்கு பிரிட்டிஷ் ரூபாயின் மதிப்பில் GBP 19,140. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.5 லட்சம்!

இதோட உங்க மாச சம்பளத்தை கம்பேர் பண்ணி உங்க தலை சுத்தினா கம்பெனி பொறுப்பில்ல மக்கா!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.