ஏற்கெனவே கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர் இருக்கலாம்  என்று நாசா தெரிவித்துள்ளது. 

image

இதன்மூலம் எதிர்கால விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்கள் சந்திர மேற்பரப்பில் நீரை காணலாம்  மற்றும் எரிபொருளைக் கூட கண்டறியலாம் என சொல்லப்படுகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்திரனின் மேற்பரப்பு வறண்டதாக நம்பப்பட்டது, ஆனால் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள்  நிலவின் மேற்பரப்பு நீர் மூலக்கூறுக்கான தடயங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகளின்படி சந்திரனில் முன்பு நினைத்ததை விட அதிகமான நீர் இருக்கக்கூடும் என்று கூறுகின்றன. இதில் சந்திர துருவப் பகுதிகளில் நிரந்தரமாக நிழலாடிய  குளிர்பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

image

புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதிகளில் கூட சந்திரன் மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் ரசாயன ஆதாரம் கிடைத்துள்ளது. இன்ஃப்ராரெட் (சோஃபியா) வான்வழி தொலைநோக்கிக்கான ஸ்ட்ராடோஸ்பெரிக் ஆய்வகத்தின் தரவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் சந்திர மேற்பரப்பை முன்பு பயன்படுத்தியதை விட மிகவும் துல்லியமாக மூன்று மைக்ரானுக்கு பதிலாக ஆறு மைக்ரான் அலைநீளத்தில் ஸ்கேன் செய்தனர் .

  “மேலும் தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம், அது எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதைக் கண்டால், அதை மனித ஆய்வுக்கான வளமாகப் பயன்படுத்தலாம். இது குடிநீர், சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜன் மற்றும் ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்தப்படலாம் ” என்று விஞ்ஞானி ஹொன்னிபால் கூறினார்.

மற்றொரு ஆய்வு சந்திரனின் துருவப் பகுதிகளைப் ஆராய்ந்தது. அங்கு சூரிய ஒளி ஒருபோதும் காணாத சந்திர பள்ளங்களில் நீர் பனி சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் நாசா சந்திரனின் தெற்கு துருவத்திற்கு அருகிலுள்ள ஆழமான பள்ளத்தில் நீர் படிகங்களைக் கண்டறிந்தது. ஆனால் புதிய ஆய்வில் பில்லியன் கணக்கான மைக்ரோ கிராட்டர்களின் சான்றுகள் கிடைத்தன, அவை ஒவ்வொன்றும் ஒரு சிறிய அளவிலான நீர் பனியைத் சேகரித்து வைத்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது

 

 

.

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.